
ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. ஏற்கனவே 2023இல் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிரடியாக பெரிய ரன்கள் குவிக்கத் தவறியதால் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் ஒருநாள் மாற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
எனவே ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் இங்கிலாந்தில் 950+ ரன்களை குவித்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அந்த ஒரே காரணத்திற்காக ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு அவரை இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்தது. அத்துடன் டி20 அணியின் கேப்டனாக வளர்ப்பதற்காக அவரை தேர்வுக்குழு துணைத் தலைவராக தேர்ந்தெடுத்து ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தது.
ஆனால் அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசி சர்வதேச 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் மோசமான ஃபார்மில் இருக்கும் அவரை 2026 டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து தேர்வுக்குழு கழற்றி விட்டுட்டுள்ளது. அதன் காரணமாக இந்திய டி20 அணியின் கேப்டனாககில் உருவாவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் போட்டிக்கு ஜெய்ஸ்வால், இஷான் கிசான், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்திய டி20 அணியில் சுப்மன் கில் மீண்டும் விளையாடுவதும் கடினமானதாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய டி20 அணியில் கில்லுடைய பயணம் முடிந்து விடவில்லை என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டனாக இருக்கும் அவர் 2026 ஐபிஎல் அல்லது ஏதேனும் ஒரு சர்வதேச தொடரில் பெரிய ரன்கள் குவித்தால் மீண்டும் கம்பேக் கொடுத்து விடுவார் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “இது கில்லுக்கான சமிக்கை கிடையாது. அவர் தன்னுடைய இடம் வழங்கப்பட்டதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. அணியில் நிறைய போட்டி நிலவுகிறது. தற்சமயத்தில் ஓப்பனிங்கில் அணிக்காக அசத்தக்கூடிய நிறைய வீரர்கள் கிடைத்துள்ளார்கள். இருப்பினும் இம்முடிவு சுப்மன் கில் பயணிக்கும் சாலையின் முடிவு கிடையாது. சிறந்த வீரரான அவரிடம் அழகான டெக்னிக் இருக்கிறது”
இதையும் படிங்க: விராட், ரோஹித் இயற்கையா போகல.. அவங்க தான் கட்டாயப்படுத்தி ரிட்டையராக வெச்சாங்க.. உத்தப்பா ஆதங்கம்
“எனவே அவர் அற்புதமான கம்பேக் கொடுப்பார். இங்கே அவர் இப்போதும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கிறார் என்பதை மறக்காதீர்கள். தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் தேவைப்படும் காம்பினேசனை பார்த்தே அந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சூரியகுமார் மற்றும் அஜித் அகர்கர் சொன்னதை நானும் கேட்டேன். எனவே க்ளாஸ் கிரிக்கெட் வீரரான கில் கம்பேக் கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.