விராட், ரோஹித் இயற்கையா போகல.. அவங்க தான் கட்டாயப்படுத்தி ரிட்டையராக வெச்சாங்க.. உத்தப்பா ஆதங்கம்

Robin Uthappa 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்கள். அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வந்த அவர்கள் கடந்த நியூசிலாந்து தொடரில் சுமாராக பேட்டிங் செய்து இந்தியாவின் ஒய்ட்வாஷ் தோல்விக்கு காரணமானார்கள்.

அதற்கடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கும் விராட், ரோஹித் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியது முக்கிய காரணமானது. குறிப்பாக அரை சதம் கூட அடிக்காத ரோஹித் சர்மா கடைசிப் போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

- Advertisement -

இயற்கையான ஓய்வல்ல:

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர்கள் அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெறவிருந்த தொடரில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுக்க முடிவெடுத்தனர். அதற்காகவே சுமார் 10 வருடங்கள் கழித்து அவர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாரானார்கள். ஆனால் அதற்கு முன் அவர்களைக் கழற்றி விட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

அடுத்த சில நாட்களில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தது அந்த செய்திகளை உண்மையாக்கியது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் சில வருடங்கள் விளையாடுவதற்கு தகுதியான விராட், ரோஹித் இயற்கையாக ஓய்வு பெறவில்லை என்று முன்னாள் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அவர்களை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவினர் வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்ததாகவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

உத்தப்பா ஆதங்கம்:

அதையும் தாண்டி தற்போது அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தி வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் உத்தப்பா இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்களுடைய ஓய்வு வலுக்கட்டாயத்தால் வந்ததா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கண்டிப்பாக அது இயற்கையாக நிகழ்ந்ததாக தெரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்பதை அவர்களே நேரம் வரும் போது சொல்வார்கள்”

இதையும் படிங்க: 123 ரன்ஸ்.. மோசமான உலக சாதனை படைத்து.. சிஎஸ்கே தேர்வை அவமானப்படுத்திய பாண்டிச்சேரி கேப்டன்

“ஆனால் அது இயற்கையான ஓய்வு என்று நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் ரன்கள் அடிக்காத ரோஹித் சர்மா 6 மாதங்கள் ஓய்வெடுத்து தன்னுடைய ஃபிட்னஸில் வேலை செய்ய வேண்டும் என்று நான் கருதினேன். ஏனெனில் மீண்டும் அவர் ரன்கள் அடிப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தற்போது விராட், ரோஹித் கண்களில் பசியைப் பார்ப்பது குளிர்ச்சியாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய சாதித்த அவர்கள் தொடர்ந்து விளையாடி வருவதைப் பார்ப்பது அன்பாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement