கம்பீரை விட நெஹ்ரா தான் இந்தியாவுக்கு சரியான கோச்.. இதை விட வேற காரணம் வேணுமா? ஹர்பஜன் வெளிப்படை

Harbhajan Singh
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக போராடி வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. 2022இல் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி ஹர்டிக் பாண்டியா – ஆஷிஸ் நெஹ்ரா தலைமையில் முதல் வருடத்திலேயே அபாரமாக விளையாடி கோப்பையை வென்ற சாதனை படைத்தது.

அதன் வாயிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் இந்திய தலைமைப் பயிற்சியாளர் என்ற சாதனையையும் நெஹ்ரா படைத்தான். அடுத்த வருடம் ஃபைனல் வரை சென்ற குஜராத் கடந்த வருடம் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் சுமாராக விளையாடி வெளியேறியது. ஆனால் இந்த வருடம் தவறுகளைத் திருத்திக்கொண்ட குஜராத் மீண்டும் கில் – நெஹ்ரா தலைமையில் ஆரம்பம் முதலே அசத்தி வருகிறது.

- Advertisement -

சிறந்த கோச்:

அவர்களது தலைமையில் இதுவரை 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்ற குஜராத் கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மற்றவர்களைக் காட்டிலும் ஆஷிஸ் நெஹ்ரா சிறந்த பயிற்சியாளராக செயல்பட்டு வருவதாக ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். மேலும் கௌதம் கம்பீரை விட நெஹ்ரா இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட சரியானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏனெனில் இளம் வீரர்களை வைத்து முடியாது என்று மற்றவர்கள் நினைக்கும் காரியங்களை நெஹ்ரா முடித்துக் காட்டுவதாக ஹர்பஜன் பாராட்டியுள்ளார். இது பற்றி ஹர்பஜன் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் நெஹ்ராவை விட இந்திய அணிக்கு சிறந்த பயிற்சியாளர் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அவரின் மிகவும் சிறந்த பயிற்சியாளர்”

- Advertisement -

ஹர்பஜன் பாராட்டு:

“ஒருவேளை பிசிசிஐ விரும்பினால் இந்திய அணியுடன் நீங்கள் வேலை செய்ய விரும்புகிறீர்களா? என்று அவரிடம் கேட்க வேண்டும். இருப்பினும் இந்திய அணிக்காக அதிக நேரம் ஒதுக்க முடியாது என்பதால் அவர் அதற்கு சம்மதிப்பார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவரை விட தற்சமயத்தில் இந்திய அணிக்கு சிறந்த பயிற்சியாளர் இல்லை. வெல்டன் நெஹ்ரா. குஜராத் அணியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே அவர் மூச்சை கொடுத்து உழைத்து வருகிறார்”

இதையும் படிங்க: ரோஹித் வேலையை ஈஸியாக்கிட்டாரு.. என் மனைவிக்காகவே இதை செய்ய நினச்சேன்.. மும்பை கம்பேக் சூரியகுமார்

“இடது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக ஃலெப்ட் ஆர்ம், வலது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக ரைட் ஆர்ம் பவுலர்கள் வெற்றிகரமாக பவுலிங் செய்ய முடியாது என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் நெஹ்ராவின் பவுலர்கள் அதை வெற்றிகரமாக செய்துள்ளனர். இவை அனைத்தும் மனநிலையை பொறுத்தது. அதை தான் நெஹ்ரா அணிக்குள் கொண்டு வருகிறார்” எனக் கூறினார்.

Advertisement