கே.எல் ராகுல் இடத்தில் அவரை ஆட வையுங்க.. 2 ஆவது போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை அறிவித்த – ஹர்பஜன் சிங்

Harbhajan-Singh
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் காரணமாக ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக நாளை பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கவுள்ள வேளையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ஏனெனில் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவர்களது இடத்த்தினை நிரப்பியாக வேண்டும்.

அந்தவகையில் நாளைய பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? என்று பலரும் தங்களது பிளேயிங் லெவனை வெளியிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் இரண்டாவது போட்டிக்கான தனது உத்தேச பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அணியில் :

- Advertisement -

கே.எல் ராகுலுக்கு பதிலாக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அசத்திய சர்ஃபராஸ் கானுக்கும், ஜடேஜாவிற்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளார். அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஹர்பஜன் சிங் வெளியிட்ட பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் நடைபெறும் விசாகப்பட்டினம் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) சர்பராஸ் கான், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எஸ் பரத், 7) ரவிச்சந்திரன் அஷ்வின், 8) அக்சர் படேல், 9) வாஷிங்டன் சுந்தர், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) குல்தீப் யாதவ்.

Advertisement