IPL 2023 : ராஜஸ்தானை அவங்க முந்திடுவாங்க, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லக்கூடிய 4 அணிகள் இது தான் – ஹர்பஜன் கணிப்பு

Harbhajan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. அதன் முடிவில் புள்ளி பட்டியலில் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற முடியும் என்பதால் 10 அணிகளும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. முன்னதாக 2008இல் துவங்கப்பட்டு பெரும்பாலும் 8 அணிகளுடன் விளையாடப்பட்டு வந்த ஐபிஎல் தொடரில் கடந்த வருடம் லக்னோ, குஜராத் ஆகிய புதிய 2 அணிகள் இணைக்கப்பட்டது. அதன் காரணமாக தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி முன்பை விட மும்மடங்கு அதிகமாக காணப்படுகிறது.

எடுத்துக்காட்டாக இதுவரை நடைபெற்ற 47 போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் மட்டும் 9 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2, 3 ஆகிய இடங்களில் 10 போட்டிகளில் தலா 5 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளை பதிவு செய்துள்ள லக்னோ மற்றும் சென்னை (1 போட்டி ரத்து) ஆகிய அணிகள் 11 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதை விட 4, 5, 6, 7 ஆகிய இடங்களில் ராஜஸ்தான், பெங்களூரு, மும்பை, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் தலா 5 வெற்றிகள் 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.

- Advertisement -

ஹர்பஜன் கணிப்பு:
இதனால் 1 புள்ளியும் நேர்மறை ரன் ரேட்டும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் 2 முதல் 3 அணிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது போக இந்த சீசனில் ஆரம்பம் முதலே எந்த அணியும் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வரவில்லை. குறிப்பாக புள்ளி பட்டியலில் ஹாட்ரிக் வெற்றுகளுடன் முதலிடத்தில் ஜொலித்து வரும் குஜராத்தை கடைசி இடத்தில் திண்டாடும் டெல்லி கடந்த சில தினங்களுக்கு முன் அசால்டாக தோற்கடித்தது.

அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகளை இப்போது கூட கணிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் பொதுவாகவே மெதுவாக துவங்கி கடைசியில் மேலே ஏறும் வழக்கத்தை கொண்ட வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் தற்போது 7வது இடத்தில் தவித்தாலும் கடைசி நேரத்தில் ஆரம்பம் முதலே டாப் 4 இடங்களில் இருந்து வரும் ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

- Advertisement -

அதே போல தற்போது 2வது இடத்தில் இருந்தாலும் லக்னோ கடைசி கட்ட போட்டியில் தடுமாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் குஜராத், சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இது வரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குஜராத் ஒரு அணியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் கண்டிப்பாக 2வது அணியாக தகுதி பெறும் என்று நம்புகிறேன். 3வது அனியாக மும்பை இந்தியன்ஸ் வருவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது அவர்கள் புள்ளி பட்டியலில் கீழே இருப்பதாக நீங்கள் சொல்லலாம். ஆனால் கடைசி கட்ட போட்டிகளில் வென்று அவர்கள் தகுதி பெறுவார்கள். 4வது அணியாக பெங்களூரு இருக்கலாம்”

இதையும் படிங்க:WTC Final : ஹூ ஹூம்.. நோ சேன்ஸ்.. கே.எல் ராகுல் குறித்து வெளியான அதிகாரபூர்வ தகவல் – என்ன தெரியுமா?

“அதே சமயம் ராஜஸ்தான் மிகவும் நெருக்கமாக இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் அவர்களை யாராவது பின்னுக்கு தள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அவர்களை முந்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார். இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளை அடுத்து வரும் லீக் போட்டிகள் தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் அதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement