IPL 2023 : பொல்லார்ட், ரசல் போன்ற ஜாம்பவாங்கள் வரிசையில் அவரும் வந்துட்டாரு – இளம் இந்திய வீரரை பாராட்டிய ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

கடந்த 2 மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 3வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லீக் சுற்றின் முடிவில் 6 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது. அந்த அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் வெளியேறிய நிலையில் ஆண்ட்ரே ரசல் உள்ளிட்ட நிறைய முக்கிய வீரர்கள் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் அந்த அணிக்கு இளம் வீரர் ரிங்கு சிங் மிகச் சிறப்பாக செயல்பட்டு லேட்டஸ்ட் பினிஷராக உருவெடுத்துள்ளது மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளது.

Naveen Ul Haq Rinku

- Advertisement -

மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கடந்த 2018 முதலில் கொல்கத்தா அணியில் பெஞ்சில் அமர்ந்து வந்த அவர் கடந்த வருடம் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். அதனால் இந்த வருடம் முதல் முறையாக கேரியரில் முழுமையான 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்று அசத்திய அவர் 474 ரன்கள் குவித்து வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக்கொடுத்த அவர் பஞ்சாப்புக்கு எதிராகவும் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார்.

பொல்லார்ட் வரிசையில்:
அதை விட லக்னோக்கு எதிராக நேற்று பிளே ஆப் வாய்ப்பு பறிபோனது தெரிந்தும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறிய நிலையில் 177 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு கடைசி நேரத்தில் தனி ஒருவனாக போராடிய அவர் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 67* (33) ரன்களை விளாசி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். இருப்பினும் 1 ரன்னில் வெற்றி நழுவி போனாலும் அழுத்தமான சூழ்நிலையில் பதறாமல் எதிரணிகளை பயமுறுத்தி பந்தாடும் அவருடைய போராட்ட குணம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Rinku SIngh

அதனால் ஒரு கட்டத்தில் ரசல் ரசல் என்று கொண்டாடிய கொல்கத்தா ரசிகர்கள் தற்போது ரிங்கு ரிங்கு என்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் டெத் ஓவர்களில் பொல்லார்ட், ரசல் போன்ற எதிரணிகளை மிரட்டும் ஜாம்பவான்கள் வரிசையில் ரிங்கு சிங்கும் இணைந்துள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன் அவர் இந்தியாவுக்காக விளையாடியிருப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் வரலாற்றில் ஜாம்பவான் ஃபினிஷர்களின் பட்டியலில் ரிங்கு சிங் தன்னுடைய பெயரையும் இணைத்துள்ளார். குறிப்பாக இந்த சீசனில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து அவர் தன்னுடைய பெயரை ஆண்ட்ரே ரசல், கைரன் பொல்லார்ட் ஆகியோரது வரிசையில் சேர்த்துள்ளார். அந்தளவுக்கு திறமையான இந்த வீரருக்கு நான் சல்யூட் செய்கிறேன். இந்த சீசனில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடி பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற அவருக்கு நான் தலை வணங்குகிறேன்”

Harbhajan

“இந்த சமயத்தில் ரிங்கு சிங் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். அதே சமயம் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடும் போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரராக இருப்பார். மேலும் அந்தப் போட்டியில் க்ருனால் பாண்டியா தம்முடைய பவுலர்களை சிறப்பாக மாற்றி பயன்படுத்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். கொல்கத்தாவுக்கு எதிராக லக்னோ அணியின் சுழல் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது”

இதையும் படிங்க:IPL 2023 : அவர் ஒருத்தர் அடிச்சுருந்தா நாங்க ஜெயிச்சுருப்போம், பிளே ஆஃப்ல என்னோட சப்போர்ட் அந்த டீம்க்கு தான் – டு பிளேஸிஸ்

“குறிப்பாக சுழலுக்கு சாதகமாக சேப்பாக்கத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டிக்கு முன்பாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்” என்று கூறினார். அவர் மட்டுமல்லாது ரவி சாஸ்திரி உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் ரிங்கு சிங் வரும் காலங்களில் இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்று தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement