IPL 2023 : அவர் ஒருத்தர் அடிச்சுருந்தா நாங்க ஜெயிச்சுருப்போம், பிளே ஆஃப்ல என்னோட சப்போர்ட் அந்த டீம்க்கு தான் – டு பிளேஸிஸ்

Faf
- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. மறுபுறம் தங்களுடைய முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் களமிறங்கிய பெங்களூரு மீண்டும் வரலாற்றில் 16வது முறையாக ஏமாற்றத்துடன் வெளியேறியது. குறிப்பாக குஜராத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சொந்த ஊரில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் பரிதாபமாக தோற்றது.

அந்தப் போட்டியில் இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் மீண்டும் தனி ஒருவனாக போராடிய விராட் கோலி சதமடித்து 101* (61) ரன்கள் எடுத்த உதவியுடன் 198 ரன்களை பெங்களூரு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய குஜராத்துக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய சுப்மன் கில் 104* (52) ரன்கள் விளாசி தோல்வியை பரிசளித்தார். அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து போராடிய விராட் கோலியின் போராட்டமும் கடந்த காலங்களில் சென்னை அணிக்காக செயல்பட்டதை விட கேப்டனாக உச்சகட்டமாக 730 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பையை வென்று போராடிய டு பிளேஸிஸ் போராட்டமும் வீணானதால் அந்த இருவருமே சோகமடைந்தனர்.

- Advertisement -

டு பிளேஸிஸ் சப்போர்ட்:
முன்னதாக இந்த சீசனில் பந்து வீச்சு துறையில் சிராஜ் தவிர்த்து ஏனைய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதும் பேட்டிங் துறையில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டு பிளேஸிஸ் ஆகிய முறை தவிர்த்து இதர வீரர்கள் சுமாராக செயல்பட்டதும் பெங்களூருவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதிலும் குறிப்பாக வெற்றியை தீர்மானிக்கும் ரன்களை எடுக்க வேண்டிய தினேஷ் கார்த்திக் 13 இன்னிங்ஸில் வெறும் 140 ரன்களை மட்டுமே எடுத்து 3 டக் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரராக மோசமான சாதனை படைத்தார்.

கடந்த வருடம் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் 330 ரன்கள் எடுத்து மிகச் சிறந்த பினிஷராக செயல்பட்டதால் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல உதவியால் இந்தியாவுக்காகவும் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக இந்த சீசனில் சுமாராக செயல்பட்ட அவர் பெங்களூருவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் கழற்றி விடுமாறு அந்த அணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் மிகச் சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் இந்த வருடம் சுமாராக செயல்பட்டது பெங்களூருவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக கேப்டன் டு பிளேஸிஸ் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்ற நிலைமையில் பிளே ஆப் சுற்றில் தமக்கு மிகவும் பிடித்த முன்னாள் அணியான சென்னைக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது. விராட் கோலி நம்ப முடியாத இன்னிங்ஸ் விளையாடி எங்களுக்கு போராடும் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை எங்களிடமிருந்து பறித்து விட்டார்”

“இந்த தொடரில் டாப் 4 பேட்ஸ்மேன்களை தவிர்த்து எங்கள் அணியில் பெரிய ரன்கள் வரவில்லை. அதனால் கடைசி நேரத்தில் பினிஷிங் செய்வதில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். குறிப்பாக கடந்த வருடம் டிகே அனைத்து ஏரியாவிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டது போல் இந்த சீசனில் செயல்பட முடியவில்லை”

இதையும் படிங்க:IPL 2023 : ஹல்லா போல்னு சொல்லியே ராஜஸ்தான் சோளிய முடித்த நட்சத்திர வீரரை – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

“மறுபுறம் இந்த சீசனில் வெற்றி பெற்ற அணிகளை நீங்கள் பார்த்தால் அதில் 5, 6, 7வது இடங்களில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் நல்ல ஹிட்டர்களாக இருந்தனர். இருப்பினும் இது போன்ற தோல்விகள் விளையாட்டில் ஒரு அங்கமாகும். அதே சமயம் பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெற்றுள்ளதை பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன்” என்று கூறினார்.

Advertisement