IPL 2023 : ஹல்லா போல்னு சொல்லியே ராஜஸ்தான் சோளிய முடித்த நட்சத்திர வீரரை – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

Advertisement

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், முன்னாள் சாம்பியன் சென்னை, லக்னோ ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு சென்றன. மேலும் டெல்லி, ஹைதராபாத் ஆகிய அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறிய நிலையில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வெளியேறின.

அதனால் கடைசி இடத்தை பிடிப்பதற்கு பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் நேற்றைய கடைசி நாளில் போட்டி போட்டன. அதில் நடப்புச் சாம்பியன் குஜராத்திடம் பெங்களூரு தோல்வியை சந்தித்ததால் ஹைதராபாத்தை தனது கடைசி போட்டியில் தோற்கடித்த மும்பை 4வது அணியாக பிளே ஆப் இருக்கிறது. மறுபுறம் தாங்கள் பிளே ஆப் செல்ல அந்த 2 அணிகளும் தோற்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் அது நடைபெறாததால் லீக் சுற்றுடன் பெட்டி படுக்கையை கட்டியது.

- Advertisement -

ஹல்லா போல்னு சொல்லியே:
முன்னதாக 2008இல் ஷேன் வார்னே தலைமையில் முதல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அதன் பின் தொடர்ந்து சுமாராக செயல்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த வருடம் சஞ்சு சாம்சன் தலைமையில் 15 வருடங்கள் கழித்து ஃபைனல் வரை சென்று நழுவ விட்ட கோப்பையை இந்த முறை எப்படியாவது முத்தமிட வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கிய அந்த அணி முதல் பகுதியில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்தில் இருந்தது. குறிப்பாக தோனி தலைமையிலான சென்னையை அதன் கோட்டையான சேப்பாக்கம் உட்பட 2 முறையும் தோற்கடித்த அந்த அணி நிச்சயம் பிளே ஆப் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பொதுவாகவே வாழ்க்கையில் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டிலும் வெற்றி பெறுவதற்கு முன்பே கொண்டாடிய பல வீரர்கள் இறுதியில் தோல்வியை சந்தித்ததை பலமுறை பார்த்துள்ளோம். அதற்கு இந்த சீசனில் எடுத்துக்காட்டாக ஆரம்பத்தில் வெற்றி நடை போட்ட காரணத்தால் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் நட்சத்திர தமிழக வீரர் அஸ்வின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்பும் “ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல்” என்று எதிரணி ரசிகர்களை கலாய்க்கும் வகையில் வீடியோ வெளியிட்டு கடுப்பேற்றும் வகையில் கொண்டாடினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சென்னையை அதன் சொந்த ஊரான சேப்பாக்கத்தில் தோற்கடித்த மகிழ்ச்சியில் “ஹல்லா போல் நல்லா போல்” என்று பயிற்சியாளர் ராஜாமணி மற்றும் இதர சில வீரர்களுடன் சேர்ந்து அவர் வீடியோ போட்டு கொண்டாடினார். ஆனால் பொதுவாகவே சற்று ஜாலியாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடிய அஸ்வின் அப்படி விளையாட்டாக வீடியோ போட்டதிலிருந்து ராஜஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி பாதையில் நடக்கத் தொடங்கியது.

இருப்பினும் அப்போதும் அசராத அவர் தோல்விகளுக்கேற்றார் போல் “ஹல்லா போல் கொஞ்சம் மெல்லமா போல்” என்ற அதே வசனத்தை மாற்றி சொல்லி அடுத்த போட்டியில் தோல்வியை சந்தித்த போது “ஹல்லா போல் கொஞ்சம் டல்லா போல்” என மாற்றி சொல்லி தொடர்ந்து வீடியோ பதிவேற்றி வந்தார். அத்தோடு நிற்காமல் மும்பையை எப்படியாவது ஹைதராபாத் தோற்கடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்படும் முன்னாள் ஜாம்பவான் வீரர் முத்தையா முரளிதரனுடன் இருக்கும் படத்தை பதிவிட்ட அவர்மீண்டும் “ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல்” என்ற வசனத்தை சொல்லிக் கொண்டே சிறப்பாக விளையாடி ராஜஸ்தானுக்காக வெற்றி பெறுங்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

இதையும் படிங்க:IPL 2023 : ஏபிடி ஆல் டைம் சாதனை சமன் – சிஎஸ்கே போலவே அசத்தியும் கப் வாங்க முடியாத சோகத்தில் டு பிளேஸிஸ் – விராட் கோலி

ஆனால் இறுதியில் அவரது அணி வெளியேறியதால் “ஹல்லா போல் அதை சீசனில் போல்” என்று அவர் கூறிய வசனத்தை அவருக்கே பதிலடியாக கொடுக்கும் வகையில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் “ஹல்லா போல்” என்று சொல்லி சொல்லியே ராஜஸ்தான் அணியின் வெற்றி முடித்து விட்டதாகவும் நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஸ்வினை கலாய்த்து வருகின்றனர். சென்னைக்கு விசில் போடு என்பது போல் ராஜஸ்தானுக்கு ஹல்லா போல் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement