- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இப்போவாச்சும் விராட், ரோஹித் தரத்தை புரிஞ்சிக்கோங்க.. நெட்ஸ் மாதிரி இதை செய்றது எளிதல்ல.. ஹர்பஜன் சிங்

இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. அதில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது மாநில அணிகளுக்காக விளையாடுகிறார்கள். தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள்.

இங்கிருந்து 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடைபெற அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு முன்னதாக வயதைக் காரணமாக வைத்து அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முயற்சிக்கிறார்கள். அதனுடைய முதல் படியாகவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது.

- Advertisement -

உள்ளூரிலும் அசத்தல்:

இருப்பினும் அதற்காக அசராத ரோஹித், விராட் கடந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்களில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்தனர். அதே வேகத்தில் விஜய் ஹசாரே கோப்பையில் சிக்கிமுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சதமடித்து 155 ரன்களை குவித்து மும்பை வெற்றி பெற உதவினார். ஆந்திராவுக்கு எதிராக 299 சேசிங்கில் சதமடித்த விராட் கோலி 131 ரன்களை குவித்து டெல்லி எளிதாக வெற்றி பெற உதவினார்.

இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டாக இருந்தாலும் வலைப்பயிற்சி போல எளிதாக சதமடிக்க முடியாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் அதை எளிதாக செய்யும் விராட், ரோஹித்தின் தரத்தை இனிமேலாவது புரிந்துகொண்டு உலகக் கோப்பையிலிருந்து கழற்றி விட முயற்சிக்காதீர்கள் என்றும் ஹர்பஜன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஹர்பஜன் பாராட்டு:

“பெரிய வீரர்கள் உள்ளூரில் விளையாடுவதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. நீங்கள் அதை செய்யும் போது உள்ளூரில் விளையாடும் வீரர்களின் தன்னம்பிக்கையும் உயரும். டெல்லிக்காக விராட் விளையாடுவது அவர்களுடைய அணியில் இருக்கும் இளம் குழந்தைகளுக்கு பெரிய கற்றல் அனுபவத்தைக் கொடுக்கும். அதே போல வெற்றிகரமான அணியாக இருந்தாலும் ரோஹித் விளையாடுவது மும்பை அணிக்கு உதவும்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனை விட அபிஷேக் சர்மா இந்த விடயத்தில் பெஸ்ட்.. அவரை யூஸ் பண்ணுங்க – சிறுவயது கோச் பேட்டி

“அவர்கள் உள்ளூரில் விளையாடுவது பெரியது. அவர்கள் ரன்கள் குவிப்பது நல்ல அறிகுறியாகும். நீங்கள் யாருக்கு எதிராக விளையாடுகிறீர்கள் என்பதை விட மைதானம் மற்றும் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதே முக்கியம். உள்ளூர் போட்டிகள் வலைப்பயிற்சி கிடையாது. அங்கே சதமடிப்பதும் பெரிய விஷயமாகும். அங்கே நீங்கள் ரன்கள், சதமடிப்பது நல்ல பொழுதுபோக்கு. முன்னோக்கிச் செல்கையில் விராட் ரோஹித்துக்கு இந்த சதங்களும் பெரியதாகவே அமையும்” என்று கூறினார்.

- Advertisement -