தோனியை சாய்க்க இதை செய்யனும்.. அதை செஞ்சு தான் சிஎஸ்கேவை மும்பை தோற்கடிச்சாங்க.. ஹர்பஜன் ஓப்பன்டாக்

Harbhajan Singh
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தலா 5 கோப்பைகளை வென்றுள்ளன. அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கிரிக்கெட் அணிகளாக சாதனை படைத்துள்ள மும்பையும் சென்னையும் பரம எதிரிகளாகவும் பாவிக்கப்படுகின்றன. இந்த 2 அணிகளும் மற்ற ஐபிஎல் அணிகளுக்கு எதிராக நிறைய வெற்றிகளை பெற்றுள்ளன. ஆனால் இவ்விரு அணிகளில் சென்னை அணியை மும்பை அதிகமாக தோற்கடித்துள்ளது.

வரலாற்றில் இதுவரை 37 போட்டிகளில் சென்னையை 20 முறை மும்பை வென்றுள்ளது. சென்னை 17 வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 2010 ஐபிஎல் ஃபைனலில் சச்சின் தலைமையிலான மும்பையை தோற்கடித்து சென்னை முதல் கோப்பையை வென்றது. ஆனால் 2013, 2015, 2019 ஆகிய 3 ஐபிஎல் ஃபைனல்களில் சென்னையில் தோற்கடித்து மும்பை கோப்பைகளை வென்றது.

- Advertisement -

சென்னை – மும்பை:

இத்தனைக்கும் 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற மாஸ்டர் கேப்டன் தோனி தான் சிஎஸ்கே கேப்டனாக இருந்தார். ஆனால் அப்படிப்பட்ட மகத்தான தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை பலமுறை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் தோனி போன்ற மகத்தான கேப்டனின் அணியை வீழ்த்த அவரை விட சிறந்த தந்திரங்களை வகுக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

அதை ரோஹித் சர்மா செய்ததாலேயே மும்பை வெற்றிகரமாக செயல்பட்டதாகவும் ஹர்பஜன் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனியை மிஞ்சுவதற்கு அவரை விட நீங்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். உங்களுடைய வீரர்களை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அது எளிதல்ல. ஆனால் தங்களுடைய வீரர்களை வைத்து மும்பை அதை சரியாக செய்தது”

- Advertisement -

வெற்றிகரமான கேப்டன்கள்:

“அவர்களுடைய திட்டம் நன்றாக இருக்கும். தோனி கொண்டு வரும் திட்டங்களை உடைப்பதற்காக நாங்கள் வேலை செய்து தீர்வுகளை கண்டோம். அதனால் அழுத்தமான சூழ்நிலைகளில் சிஎஸ்கே அணியை விட மும்பை சிறப்பாக செயல்பட்டுள்ளது. மும்பை அணியிலிருந்து சிஎஸ்கே அணிக்குச் சென்ற பின் அங்கே நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன்”

இதையும் படிங்க: பஞ்சாப்பில் 18 கோடிக்கு யாரும் ஒர்த்தில்ல.. அவரை தவிர்த்து பாண்டிங் எல்லாரையும் கழற்றி விடுவாரு.. ஆகாஷ் சோப்ரா

“அங்கே நன்றாக பந்து வீசி கோப்பையையும், ரன்னர்-அப் மெடலையும் வென்றோம். 2018இல் ட்வயன் ப்ராவோ மும்பைக்கு எதிராக மேஜிக் பேட்டிங் செய்தார். கேதர் ஜாதவ் ஃபினிஷிங் கொடுத்தார். இல்லையேல் அந்தப் போட்டியிலும் மும்பை வென்றிருக்கும்” என்று கூறினார். அத்துடன் கங்குலி, தோனி, விராட் கோலி, ரோஹித் ஆகியோர் தங்களுடைய சொந்த வழியில் அணியின் வெற்றிகளுக்காக பங்காற்றியதாக ஹர்பஜன் கூறியுள்ளார். அவர்களுடைய பங்களிப்பால் இந்திய அணி தற்போது வெற்றிக்காக புதிய லெவலில் போராடுவதாகவும் ஹர்பஜன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement