மும்பை ஏர்போர்ட்டில் பிரச்சனையால் சிக்கி தவித்த ஷர்துல் தாகூர். உதவிய ஹர்பஜன் – வைரலாகும் பதிவு

Shardul-Thakur-and-Harbhajan
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் கடந்த சில தொடர்களாகவே இந்திய அணியில் விளையாடாமல் இருந்த வேளையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடித்திருந்தார். தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கிய அவர் தற்போது டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்டாண்ட் பை வீரராகவும் இடம் பிடித்துள்ளார்.

நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடிய ஷர்துல் தாகூர் அந்த போட்டி முடிந்த கையோடு டி20 உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய அணியுடன் இணைவார் என்று பிசிசிஐ அறிவித்த வேளையில் டெல்லியில் இருந்து மும்பை வந்தடைந்த அவர் மும்பை விமான நிலையத்தில் தனது லக்கேஜ் மற்றும் உபகரணங்களுக்காக நீண்ட நேரமாக காத்திருந்தார்.

- Advertisement -

ஆனாலும் அவருக்கு லக்கேஜ் உடனடியாக வந்து சேரவில்லை. அதேபோன்று அவருக்கு உதவ அங்கு எந்த ஒரு அதிகாரியும் இல்லை. இந்நிலையில் இந்த மோசமான விடயத்தால் கடுப்பான ஷர்துல் தாகூர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் : மும்பை விமான நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருக்கிறேன். என்னுடைய உபகரணங்கள் மற்றும் லக்கேஜ் ஆகியோவை இன்னும் வந்து சேரவில்லை.

இந்த பிரச்சனையை நான் மும்பை ஏர்போட்டில் முதல்முறையாக சந்திக்கவில்லை. ஏற்கனவே பலமுறை இதே போன்று தான் நடந்துள்ளது. விரைவில் எனக்கு உதவ ஒரு அதிகாரியை அனுப்ப வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வேண்டுகோளை வைத்திருந்தார். அதனை கண்ட இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் :

- Advertisement -

உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்காக வருந்துகிறேன். உங்களது உபகரணங்கள் மற்றும் லக்கேஜ் ஆகியவை உங்களிடம் விரைவில் வந்து சேரும் எங்களுடைய ஊழியரை உதவிக்கு அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டார். இதற்கு காரணம் யாதெனில் ஏர் இந்தியாவின் கௌரவ பதவியில் ஹர்பஜன் சிங் இருப்பதால் அவரே இந்த விவகாரத்திற்கு தனது ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : பும்ராவை தொடர்ந்து மற்றொரு ஸ்டார் பவுலர் விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு

அதனை தொடர்ந்து ஷர்துல் தாகூர் சிறிது நேரத்தில் அவரது உடமைகள் கிடைக்கவே : எனக்கு அனைத்து லக்கேஜும் கிடைத்துவிட்டது நன்றி பாஜி என்று அவர் தனது நன்றியையும் தெரிவித்தார். முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் நாளை ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு இந்திய அணியுடன் இணைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement