டி20 உலககோப்பை : பும்ராவை தொடர்ந்து மற்றொரு ஸ்டார் பவுலர் விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Deepak Chahar IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை தொடரானது துவங்க உள்ள வேளையில் அனைத்து அணிகளும் தற்போது ஆஸ்திரேலியா சென்றடைந்து பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது ஆஸ்திரேலியா சென்று பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

Bumrah

- Advertisement -

ஏற்கனவே இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் முன்னர் இந்திய அணியின் நட்சத்திரக பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனை தொடர்ந்து ஸ்டான்ட் பை லிஸ்டில் இருந்த முகமது ஷமி அல்லது தீபக் சாகர் ஆகிய இருவரில் ஒருவருக்கு பும்ராவிற்கு பதிலாக அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முகமது ஷமி அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவர் மீண்டும் தற்போது குணமடைந்து ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளார். அதே வேளையில் தீபக் சாகர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட முதுகு வலி காரணமாக அந்த தொடரில் விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற தீபக் சாகரின் காயம் குறித்த தற்போது வெளியாகி அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Deepak Chahar

ஏனெனில் ஏற்கனவே காயம்பட்ட இடத்திலேயே மீண்டும் தீபக் சாகருக்கு காயம் ஏற்ப்பட்டு உள்ளதால் அவர் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதனால் இந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து அவர் வெளியேற்றப்படுகிறார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது தீபக் சாகரும் இந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் ஸ்டாண்ட் பை வீரர்களாக பறக்க உள்ளனர் என்றும் பி.சி.சி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இங்கேயும் சண்டையா, உள்ளூர் டி20 தொடரில் இந்திய வீரர்கள் மோதல் – காரணமும் வீடியோ உள்ளே

மேலும் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களாக ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரும் ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளனர். அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்பவும், வீரர்களின் உடல் நிலைக்கு ஏற்பவும் அணியானது இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement