17 பந்தில் 11.. அவர் என்ன பொல்லார்டா? பாண்டியாவுக்கும் திலக்கிற்கும் வேற நியாயமா? ஹர்பஜன், விஹாரி விளாசல்

Hanuma Vihari
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற்ற 16வது போட்டியில் மும்பை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோல்வியை சந்தித்தது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 204 இலக்கை துரத்திய மும்பை 20 ஓவரில் 191/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் 5, ரியான் ரிக்கல்டன் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாடிய நமன் திர் 46 (24) ரன்கள் விளாசி அசத்தினார். மறுபுறம் சூரியகுமார் அதிரடியாக விளையாடிய நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய திலக் வர்மா தடுமாற்றமாக பேட்டிங் செய்தார். ஆனாலும் மறுபுறம் அரை சதத்தை அடித்த சூரியகுமார் வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய நேரத்தில் 67 (43) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

ஹர்பஜன் விமர்சனம்:

அடுத்து வந்த கேப்டன் பாண்டியா அதிரடியாக விளையாட முயற்சித்த நிலையில் எதிர்ப்புறம் தொடர்ந்து திலக் வர்மா தடுமாறினார். அதனால் 25 (23) ரன்களை எடுத்திருந்த போது அவரை மும்பை நிர்வாகம் மற்றும் பாண்டியா சேர்ந்து ரிட்டையர்டு அவுட்டாகி செல்ல வைத்தனர். அடுத்ததாக வந்த மிட்சேல் சான்ட்னருக்கு கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கை கொடுக்காத பாண்டியா 28* (16) ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்யவில்லை.

அதன் காரணமாக மும்பை அணி மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்தது. இந்நிலையில் இப்போட்டியில் திலக் வர்மாவை ரிட்டையர்ட் அவுட்டாக வைத்த மும்பை அணியின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். குறிப்பாக மிட்சேல் சான்ட்னர் அடித்து நொறுக்கக்கூடிய கைரன் பொல்லார்ட் கிடையாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் (எக்ஸ்) பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

விஹாரி கேள்வி:

“சான்ட்னருக்காக திலக் வர்மாவை ரிட்டையர் செய்தது எனது கருத்துப்படி தவறானது. திலக்கை விட சான்ட்னர் சிறந்த ஹிட்டரா? ஒருவேளை பொல்லார்ட் அல்லது அவரைப் போன்ற வீரருக்காக இப்படி செய்திருந்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மும்பை” என்று பதிவிட்டுள்ளார். இது ஒரு புறமிருக்க இந்த வருடம் குஜராத்துக்கு எதிரான போட்டியில் பாண்டியா 17 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்விக்கு காரணமானார்.

இதையும் படிங்க: திலக் வர்மாவை ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றியது ஏன்? போட்டிக்கு பின் ஹார்டிக் பாண்டியா – அளித்த விளக்கம்

அப்போது பாண்டியா ஏன் ரிட்டயராகவில்லை? என்று இந்திய வீரர் ஹனுமா விஹாரி விமர்சித்துள்ளார். அந்த வகையில் திலக் வர்மாவுக்கு ஒரு நியாயம் பாண்டியாவுக்கு ஒரு நியாயமா என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “திலக் வர்மா சான்ட்னருக்காக ரிட்டையர்ட் அவுட்டானாரா? குஜராத்துக்கு எதிராக பாண்டியா இதே போல போராடினார். அதே போல இன்று போராடிய திலக்கிற்கு மட்டும் ஏன் இந்த நிலை? என்று எனக்குப் புரிய வையுங்கள்” எனக் கூறியுள்ளார்.

Advertisement