Harbhajan Singh : முள்கரண்டி எடுத்து பாக் வீரர் முகமது யூசப்பை குத்தப்போனேன் – ஹர்பஜன்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பு

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.

India v Pakistan

- Advertisement -

இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் போது ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தான் வீரர் யூசுஃப் ஆகியோர் போட்ட சண்டை குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஹர்பஜன் கூறியதாவது : 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உலக கோப்பை தொடர் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இந்தியா பாகிஸ்தான் போட்டியும் நடைபெற்றது. அந்த போட்டியில் விளையாடும் லெவனில் நான் ஆடவில்லை.

அந்த போட்டியில் மதிய உணவு வேளையில் நான் சாப்பிட அமர்ந்தேன். அப்போது என்னருகே பாகிஸ்தான் வீரர் யூசப் அமர்ந்து இருந்தார். அவரும் நானும் பஞ்சாபி மொழியில் பேசுவோம் அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு காலை இழுத்துக் கொண்டோம். பிறகு யூசப் என்னை தனிப்பட்ட முறையிலும் மற்றும் என் மதத்தை பற்றி பேசியதால் கோபம் அதிகரித்து நானும் அவரும் முள் கரண்டி எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றோம்.

harbhajan

அப்போது நான் யூசபின் முகத்தில் முள்கரண்டியால் குத்த போனேன். ஆனால் ஸ்ரீநாத் மற்றும் டிராவிட் என்னை தடுத்து இழுத்து வந்தார்கள். அதேபோன்று யூசப்பை அன்வர் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் இழுத்துச் சென்றனர். அப்போது மிகக் கடுமையான கோபத்துடன் சண்டைக்கு சென்ற நாங்கள் இருவரும் தற்போது பார்த்துக் கொண்டால் அதை நினைத்து சிரித்துக்கொண்டே செல்வோம் என்று ஹர்பஜன் கூறினார்.

Advertisement