கை கொடுத்த யுவி.. மொஹாலி மைதானத்தில் கூட அஷ்வினுக்கு ஆதரவு கொடுக்காத ஹர்பஜன் சிங் – ஆச்சர்யமான புள்ளிவிவரம்

harbhajan Singh 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப் மாநில மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 276 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52, ஜோஸ் இங்லீஷ் 45, ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து 277 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் 71, கில் 74 என தொடக்க வீரர்களே பெரிய ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் இசான் கிசான் 18, ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

கைகொடுக்காத ஹர்பஜன்:
ஆனாலும் கேப்டன் கேஎல் ராகுல் 58* (53) ரன்களும் சூரியகுமார் யாதவ் 50 (49) ரன்களும் எடுத்து 48.4 ஓவரிலேயே இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து 1 – 0* (3) என ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுக் கொடுத்தனர். அதனால் ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆஸ்திரேலியா வெற்றி காண முடியவில்லை. முன்னதாக ஆசிய கோப்பையில் காயத்தை சந்தித்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக இந்த தொடரில் திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் அவருக்கு திடீரென வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று விமர்சித்த முன்னாள் வீரர்களில் ஹர்பஜன் சிங் முதன்மையானவராக இருந்தார். அதிலும் குறிப்பாக சஹால் இருக்கும் போது எப்படி அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்தார்.

- Advertisement -

அத்துடன் தம்முடைய கேரியரின் கடைசி நேரங்களில் தோனி வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விடுவதற்கு அஸ்வின் முக்கிய காரணமாக இருந்ததால் சமீப காலங்களாகவே அவரை சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஹர்பஜன் விமர்சித்து வருகிறார். அந்த சூழ்நிலையில் இப்போட்டி நடைபெற்ற மொஹாலி மைதானத்தில் பந்து வீசும் 2 எதிரெதிர் பகுதிகளுக்கு இந்திய கிரிக்கெட்டுக்காக ஆற்றிய பங்கை பாராட்டும் வகையில் யுவராஜ் சிங் எண்ட், ஹர்பஜன் சிங் எண்ட் என்று தங்களுடைய மாநிலத்தைச் சேர்ந்த 2 மகத்தான வீரர்களின் பெயர்களை பஞ்சாப் வாரியம் சூட்டியுள்ளது.

இதையும் படிங்க: ஆஸியை தோற்கடித்த இந்திய அணி.. பாகிஸ்தானை முந்தி 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் வரலாறு காணாத சரித்திர உலக சாதனை

அதில் யுவராஜ் சிங் எண்ட் பகுதியிலிருந்து பந்து 3 ஓவர்களை வீசிய அஸ்வின் வெறும் 8 ரன்களை 2.67 என்ற எக்கனாமியில் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஆனால் ஹர்பஜன் சிங் எண்ட் பகுதியிலிருந்து 7 ஓவர்கள் வீசிய அவர் 39 ரன்களை 5.57 என்ற எக்கனாமியில் வழங்கி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தடுமாறினார். இந்த புள்ளி விவரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதை பார்த்த ரசிகர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மைதானத்தில் கூட ஹர்பஜன் சிங் ஆதரவாக இல்லை என்று சமூக வலைதளங்களில் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement