சி.எஸ்.கே அணிக்காக விளையாட வச்சிருந்த என் பேட்டை திருடிட்டானுங்க – பரபரப்பை ஏற்படுத்திய சி.எஸ்.கே வீரர்

2018csk
- Advertisement -

ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 29ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக சென்னை வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். கேப்டன் தோனி, முரளிவிஜய், சுரேஷ் ரெய்னா இன்னும் சில உள்ளூர் வீரர்கள், பயிற்சி பந்துவீச்சாளர்கள் அனைவரும் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கோயம்புத்தூர் விமான நிலையம் வழியாக வந்துள்ளார்.மும்பையில் இருந்து கோயம்புத்தூருக்கு இன்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

இந்த பயணத்தின் போது அவருடைய பேட் தொலைந்து உள்ளதாக தெரிகிறது. இது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் அதிர்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். நான் கோயம்புத்தூரில் தரையிறங்கும் போது எனது பேட் கிட் பேக்கில் இல்லை. இது திருடப்பட்டதா என்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை.

அப்படி திருடப்பட்டு இருந்தால் அந்த பேட்டை கண்டுபிடிக்க விமான நிலைய நிர்வாகம் உதவவேண்டும். இந்த பயணத்தின்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட எனது பையில் 35 கிலோ கூடுதலாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்காக 1200 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்கள்.

- Advertisement -

ஆனால் முன்னதாகவே எங்களது குழுவினர் அந்த தொகையை செலுத்திவிட்டனர் என்று கூறினேன்.
எனது பேட் காணாமல் போனதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா எனவும் தெரியவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் ஆட வைத்திருந்த அந்தப்ளில் பேட் எனக்கு மிகவும் முக்கியம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன்சிங்.

இதுகுறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் டுவிட்டரில் உடனடி பதில் அளித்தனர்.
சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் உங்கள் புகாரை உடனடியாக பரிசீலனை செய்து உதவுகிறோம் என்று கூறியுள்ளனர்.

Advertisement