ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்கு 10 அணிகள் விளையாடுகின்றன. அதில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் பந்தில் சலிவாவை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது பவுலர்களுக்கு சாதகம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் கவனிக்கப் போகும் இந்திய பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சலிவாவை மீண்டும் பயன்படுத்தலாம் என்பது பவுலர்களுக்கு வரவேற்கத்தக்க நல்ல விஷயம். விரைவில் அதை நாம் சர்வதேச கிரிக்கெட்டிலும் பார்க்க முடியும். ஏனெனில் அதை வைத்து பந்தை எளிதாக பளபளபாக்க முடியும். அது ஸ்விங், ட்ரிப்ட் போன்ற விஷயங்களை பவுலர்கள் செய்வதற்கு உதவும்”
முக்கிய வீரர்கள்:
“இந்த வருடம் நான் மிகவும் நெருக்கமாக ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோரை நெருக்கமாக கவனிக்க உள்ளேன். அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம். பவுலர்களைப் பொறுத்த வரை அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோரை நான் எனது கண்களில் நெருக்கமாக கவனிப்பேன்” என்று கூறினார்.
மேலும் இப்போதைய ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பயந்து தங்களுடைய வேகத்தை அதிகரித்து சுழல் எனும் கலையை மறந்து விட்டதாக ஹர்பஜன் சிங் கவலைத் தெரிவித்துள்ளார். எனவே அதிரடிக்கு பயப்படாமல் ஸ்பின்னர்கள் பந்தை காற்றில் சுழற்றி பேட்ஸ்மேன்களுக்கு சவாலைக் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஹர்பஜன் மேலும் பேசியது பின்வருமாறு.
சுழல் எனும் கலை:
“இப்படி சொல்வதற்காக நான் வருந்துகிறேன். டி20 மற்றும் ஐபிஎல் தொடர்களில் ஸ்பின்னர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் போல பவுலிங் செய்கிறார்கள். அவர்கள் பந்தை நன்றாக சுழற்றுவது கிடையாது. பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்யத் தவறும் அவர்கள் விக்கெட்டுகள் எடுப்பதற்கான நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை”
இதையும் படிங்க: ரோஹித் மாதிரி விராட் கோலியால் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் நொறுக்க முடியாது.. இதான் காரணம்.. ஆரோன் பின்ச்
“எனவே ஸ்பின்னர்கள் கொஞ்சம் தைரியத்துடன் வாய்ப்புகளை எடுக்க வேண்டும். அவர்கள் பந்தை காற்றில் சுழற்றி வாய்ப்புகளை எடுத்து போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு போட்டியை கொடுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இப்போதுள்ள நிறைய ஸ்பின்னர்கள் குறைவான வேகத்தில் வீசினால் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்குகிறார்கள் என்ற பயத்தில் 90 – 110 கி.மீ வேகத்தில் பவுலிங் செய்கின்றனர். அதை அவர்கள் மாற்ற வேண்டும் என்று ஹர்பஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.



