ரோஹித் மாதிரி விராட் கோலியால் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் நொறுக்க முடியாது.. இதான் காரணம்.. ஆரோன் பின்ச்

Aaron Finch
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய அணிகளுக்காக அசத்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் மிகப்பெரிய அனுபவத்தைக் கொண்டுள்ள அவர்கள் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல உதவினர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா போல அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விராட் கோலியால் ரன்கள் குவிக்க முடியாது என்று 2021 டி20 உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்திய அணியில் ரோகித் அவுட்டானாலும் அதை சமாளிக்க விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதே போல மும்பை அணியில் திலக் வர்மா, சூரியகுமார், பாண்டியா ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

கோலியின் நங்கூரமான அணுகுமுறை:

ஆனால் பெங்களூரு அணியில் அது போன்ற பேட்டிங் வரிசை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே பெங்களூரு அணியில் விராட் கோலி 140 – 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று பின்ச் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் 3வது இடத்தில் விராட் கோலி இருக்கிறார் என்ற தன்னம்பிக்கையுடன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடும் முடிவை எடுத்தார்”

“ஒருவேளை ரோஹித் தவறு செய்தால் கூட அதை சரி செய்வதற்கு விராட் கோலி போன்றவர் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் அணியில் இருக்கும் அனைவருமே முதல் பந்திலிருந்து அதிரடியாக விளையாடுபவர்களாக இருக்க முடியாது. ரோஹித் சர்மா இந்திய அணியில் அதை புரிந்து செயல்படுகிறார். ஆனால் ஆர்சிபி அணியில் அது போன்ற நிலைமை இருக்கிறதா?”

- Advertisement -

பின்ச் ஆதரவு:

“இங்கே விராட் கோலி சீராக 700 – 800 ரன்கள் அடிக்க வேண்டுமா? அல்லது அதிரடியாக 400 ரன்கள் குவித்தால் போதுமா? என்பது கேள்வியாகும். ஏனென்றால் நீங்கள் விராட் கோலி அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் போது தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பது குறையும். எனவே விராட் கோலியின் ஆட்டத்தில் பெரிய மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ஹரி ப்ரூக்கை இந்திய வாரியம் தடை செஞ்சது கரெக்ட் தான்.. விலகிய பின்னணியை பகிர்ந்த மைக்கேல் வாகன்

“வேண்டுமானால் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் கொஞ்சம் மாற்றங்களை செய்யலாம். மற்றபடி 140 – 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விராட் கோலி விளையாடினால் எந்த பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் பெரும்பாலான தருணங்களில் விராட் கோலி நங்கூரமாக விளையாட வேண்டிய நிலையிலேயே இருக்கிறார். அவரைச் சுற்றி ஆர்சிபி வீரர்கள் விழுகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement