- Advertisement -
ஐ.பி.எல்

MS Dhoni : தோனியின் நம்பிக்கையை சேப்பாக்கத்தில் நிறைவேற்றிய ஹர்பஜன் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியுடன் சன் ரைசர்ஸ் அணிவீரர்களான பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் விளையாட தாயகம் திரும்புவதால் இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க சன் ரைசர்ஸ் அணி களம் காணுகிறது. அதேபோன்று கடந்த இரு போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி தோல்வியில் இருந்து மீண்டு பிளேஆப் வாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கோடு விளையாட உள்ளது.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. தற்போது முதலில் பந்துவீச்சை துவங்கிய சென்னை அணி 2 ஆவது ஓவரிலேயே பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்தியது. போட்டிக்கு முன் தோனி ஹர்பஜன் இந்த போட்டியில் ஆடுவார். எப்போதும் இந்த மைதானத்தில் அவர் விக்கெட் டேக்கர் என்று தோனி கூறியது போன்றே அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக ஹர்பஜன் தான் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே அவுட் ஆக்கி வெளியேற்றினார். கடந்த போட்டியின் ஆட்டநாயகனான பேர்ஸ்டோ இந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்பஜன் ஓவரில் தோனியிடன் கேட்ச் ஆகி டக் அவுட்டாக சோகத்துடன் வெளியேறினார்.

தற்போது 7 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை எடுத்துள்ளது. வார்னர் 33 ரன்களுடனும், மனிஷ் பாண்டே 28 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -
Published by