முடிவுக்கு வந்த ஹர்பஜனின் கிரிக்கெட். புது ரூட்டில் ஐ.பி.எல் தொடரில் பயணிக்க திட்டம் – விவரம் இதோ

Harbhajan
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கிய ஹர்பஜன் சிங் கடந்த 1998-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதிலிருந்து இதுவரை தனது ஓய்வை அறிவிக்காமல் இருக்கும் ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

harbhajan 1

- Advertisement -

அதோடு மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் 163 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது 41 வயதை அடைந்துள்ள ஹர்பஜன் சிங்கிற்கு இனி வரும் காலங்களில் எந்தவொரு ஐ.பி.எல் அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த வருட மெகா ஏலத்தில் அவர் கலந்து கொண்டாலும் எந்த ஒரு அணியும் அவரைக் கண்டு கொள்ளாது என்றே தெரிகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக தேர்வாகியிருந்த அவர் முதல் பாதியில் ஒரு சில போட்டிடிகளில் மட்டுமே ஆடினார் என்பதும் அதன் பின்னர் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹர்பஜன் இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணிக்கு ஆலோசகராக அல்லது சப்போர்ட் ஸ்டாப்பாக அதாவது பயிற்சியாளர் குழுவில் இணையவோ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் ஐ.பி.எல் அணி தங்களின் ஆலோசகராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

இதையும் படிங்க : அப்படி என்ன பண்ணிட்டாருனு இவருக்கு மீண்டும் மீண்டும் சேன்ஸ் தராங்கனு தெரியல – இங்கி வீரர் விமர்சனம்

இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள மெகா ஏலத்திற்கு முன்னர் இந்த அறிவிப்பை ஹர்பஜன் வெளியிடுவார் என்று தெரிகிறது. அதன்படி பார்க்கையில் மும்பை அல்லது பஞ்சாப் ஆகிய இரு அணிகளில் ஒன்றிற்கு அவர் ஆலோசகராகவோ அல்லது பயிற்சியாளர் குழுவிலோ இணைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement