மும்பை இந்தியன்ஸ் ? சென்னை சூப்பர் கிங்ஸ் ? இரு அணிகளில் எது பெஸ்ட் – ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

Harbhajan
- Advertisement -

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஐபிஎல் தொடர் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் ஒரு சில குறிப்பிட்ட வீரர்களைத் தவிர, அணி மாறிக்கொண்டே இருக்கும் அணியின் முழுக் கட்டமைப்பும் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு வீரரும் வேறு அணிக்கு செல்வார்கள்.

harbhajan

- Advertisement -

இப்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ஆடி அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தவர் ஹர்பஜன் சிங். சமீபத்தில் ஹர்பஜன் சிங் தனது முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவுடன் நேரலையில் உரையாடினார். இருவரும் இரண்டு அணிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குறித்து பேசினார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் :

மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தொழில்முறை சார்ந்த அணியாகும். அவர்களுக்காக விளையாடுவது மிகவும் வேடிக்கையான விஷயமாக இருந்தது. பத்து வருடங்களாக அந்த அணிக்காக ஆடிய பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளுக்கும் இடையே வித்தியாசம் என்ன என்பதைச் சொல்வது மிகவும் கடினமாக இருக்கிறது.

Harbhajan

என்னைப் பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் ரிலாக்ஸ் ஆன பெரிய அளவில் எந்த மீட்டிங்கும் இருக்காது. வீரர்களின் விருப்பப்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பார்கள். இது எல்லாம் கேப்டனாக இருக்கும் தோனியால் நடைபெறும். முக்கிய போட்டிகளில் கூட அழுத்தம் என்பது கூட தெரியாத அளவிற்கு சென்னை அணி ரிலாக்சாக இருக்கும்.

- Advertisement -

இரண்டு அணிகளுக்கும் விளையாடியது எனக்கு பெருமையாக இருக்கிறது. அதேபோல் வீரர்களுக்கு ஆதரவு அளிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் ஒரு படி மேல்தான் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். மும்பை அணியில் பல ஆண்டுகள் விளையாடியும் ஹர்பஜன் சென்னை அணியை பாராட்டி பேசி இருப்பது சி.எஸ்.கே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Harbhajan1

மேலும் இந்திய அளவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சி.எஸ்.கே ஆகிய அணிகள் பெரிய அணிகளாக இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவில் என்றும் சி.எஸ்.கே அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement