மெர்சல் பட ஸ்டைலில் தமிழில் வாழ்த்து சொன்ன ஹர்பஜன்சிங் – யாருக்கு சொன்னார் தெரியுமா ?

bhaji
- Advertisement -

தான் சென்னை அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக ஹர்பஜன்சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் “வணக்கம் தமிழ்நாடு. இனிமேல் உங்ககூட கிரிக்கெட் ஆடப்போறது ரொம்ப சந்தோசம். உங்க மண்ணு இனி என்ன வைக்கணும் சிங்கமுன்னு” என்று டிவீட் செய்து அசத்தினார். அந்த டிவீட் தமிழர்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

harbhajan

- Advertisement -

இந்நிலையில் மகளிர் தினத்தன்று அதேபோல தமிழில் மற்றொரு டிவீட் செய்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றைய அவரது டிவீட்டில் “அன்னையும் அவளே !
சகோதரியும் அவளே!
தோழியும் அவளே!
காதலியும் அவளே!
மனைவியும் அவளே!
மகளும் அவளே! உலகில் உள்ள அனைத்து உறவின் அடிப்படையும் அவளே.

பெண்ணாக பிறவி எடுத்த அனைவருக்கும் அன்பு சகோதரனின் மகளிர் தின நல்வாழ்த்துகள். பெண்மையை போற்றுவோம் என்று பதிவிட்டு தமிழக பெண்களின் மனதில் ஒரே பதிவில் சகோதரராக ஏற்கனவே இடம்பிடித்து விட்டார்.இந்நிலையில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாடவுள்ள குஷியில் ஹர்பஜன்சிங் தற்போது தமிழில் மற்றொரு டிவிட்டை பதிந்துள்ளார்.அந்த சமீபத்திய டிவீட்டில் “நான் வந்துட்டேனு சொல்லு, தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா !

HarbhajanSingh6

உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல மஞ்ச ஜெர்சில, “வீரமா” காது கிழியுற உங்க விசிலுக்கு நடுவுல ChennaiIpl க்காக விளையாட போறத நினைச்சாலே மெர்சலாகுது என்று தமிழில் எழுதியுள்ளார்.எப்போது இவர் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டாரோ அப்போதிலிருந்தே சிங் சென்னை வாசியாகவே மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement