ஹர்பஜன்சிங் தமிழில் டிவீட் போட இவர்தான் காரணமா ?

- Advertisement -

ஹர்பஜன்சிங் சமீபகாலங்களாக டிவிட்டரில் தமிழில் டிவீட் செய்து கலக்கிவருகின்றார். முதன் முதலில் ஹர்பஜன்சிங் பொங்கலுக்கு தான் தமிழில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதன்பின்னர் இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டதும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக டிவிட்டரில் தமிழில் டிவீட் செய்து தமிழர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார்.

இதற்கெல்லாம் காரணமானவர் யார் ! ஹர்பஜன்சிங் தமிழில் டிவீட் போட உதவிய அந்த நபர் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.ஹர்பஜன்சிங் தமிழில் டிவீட் போட காரணமான நபர் வேறு யாருமில்லையாம். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளம்பட்டியை சேர்ந்த சரவணன் தானாம்.

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் இஞ்சினியரான சரவணன் தற்போது அபுதாபியில் வேலை பார்த்து வருகின்றார். கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமுள்ள இவர் ஹர்பஜன்சிங்கின் தீவிர ரசிகரும் கூட. சமூக வலைத்தங்களில் யார் எங்கு ஹர்பஜன்சிங்கை பற்றி தவறாக எழுதினாலும் அங்கு சரவணன் சென்று ஹர்பஜன்சிங் தரப்பில் சண்டை போடுபவராம்.

தொடர்ந்து ஹர்பஜன்சிங்கிற்கு ஆதரவாக சரவணன் பதிவிட்டு வருவதை பார்த்த ஹர்பஜன்சிங் சரவணனிடம் தன்னுடைய மேனேஜரான விக்ரம்சிங் எண்ணை தந்து தொடர்புகொண்டு பேச சொன்னாராம்.பிறகு ஒருமுறை ஹர்பஜன்சிங் தமிழகம் வந்தபோது ஒரு தனியார் ஓட்டலில் வைத்து சரவணனை சந்தித்து பேசினாராம்.

இதன்பின்னர் தான் தன்னுடைய நம்பர் ஒன் ரசிகர் சரவணன் தான் என்று ஹர்பஜன்சிங் சமூகவலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் பொங்கலுக்கு ஹர்பஜன்சிங்கிற்கு தமிழில் வாழ்த்து சொல்லி சரவணன் மெசேஜ் போட, அதை அப்படியே காப்பி செய்து ஹர்பஜன்சிங் டிவிட்டரில் பதிவிட வழக்கத்தை விட அதிகமான அளவு வரவேற்பை பெற்றுள்ளது.அன்றுமுதல் இன்றுவரை ஹர்பஜன்சிங் தமிழில் டிவீட் செய்ய தமிழகத்தை சேர்ந்த சரவணன் தான் உதவி வருகின்றாராம்.தமிழன் என்றுமே தமிழன் தான்.

Advertisement