பெண்களே ஜெயிச்சுட்டாங்க.. அந்த 2 பேர் மனசு வெச்சா ஆர்சிபி அணியும் ஜெயிக்கலாம்.. ஹர்பஜன் எதிர்பார்ப்பு

harbhajan singh 7
- Advertisement -

மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் முதல் முறையாக மகளிர் ஐபிஎல் கோப்பையை வென்று பெங்களூரு அணி சாதனை படைத்துள்ளது. இந்த சரித்திர வெற்றி தற்போது பெங்களூரு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் ஆடவர் ஆர்சிபி அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. குறிப்பாக அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி ஆகியோர் தலைமையில் முறையே 2009, 2011, 2016 ஆகிய வருடங்களில் ஃபைனல் வரை சென்ற பெங்களூரு முக்கியமான நேரத்தில் சொதப்பி கோப்பையை எதிரணிக்கு தாரை பார்த்தது.

- Advertisement -

ஹர்பஜன் எதிர்பார்ப்பு:
அது மட்டுமல்லாமல் லீக் சுற்றில் எதிரணிகளைப் பந்தாடி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை படைக்கும் பெங்களூரு ப்ளே ஆஃப் போன்ற அழுத்தமான சுற்றில் சொதப்பலாக விளையாடி தோல்வியை சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. அதனால் சூரியன் மேற்கே உதித்தாலும் உங்களால் கோப்பையை வெல்ல முடியாது என்ற கிண்டல்களை கடந்த 15 வருடமாக ஆர்சிபி அணி சந்தித்து வருகிறது.

அந்த நிலையில் கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட மகளிர் ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணி சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் ஆடவர் அணியில் போலவே மகளிர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லாது என்ற கிண்டல்கள் இருந்தன. ஆனால் இம்முறை சிறப்பாக விளையாடி அதை உடைத்துள்ள மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அதே காரணத்தால் விரைவில் துவங்கும் ஆடவர் ஐபிஎல் 2024 தொடரிலும் கோப்பையை வெல்ல முடியும் என்ற ஆழமான நம்பிக்கை ஆர்சிபி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் ஆர்சிபி அணி 2வது வருடத்திலேயே கோப்பையை வென்றுள்ளதற்கு ஹர்பஜன் சிங்கபாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பெண்களே கோப்பையை வென்று விட்ட நிலையில் ஆண்கள் ஆர்சிபி அணியும் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்ப்பாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காயத்தால் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியை தவறவிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர் – விவரம் இதோ

அதற்கு மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகிய இருவரும் அசத்த வேண்டுமென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக பெண்கள் கோப்பையை வென்றுள்ளனர். அதே போல இந்த வருடம் ஆர்சிபி பையன்கள் வரலாற்றை திருப்பி ஐபிஎல் கோப்பையை வெல்வார்களா? தற்போது அனைவருடைய கண்களும் விராட் கோலி மற்றும் கிளன் மேக்ஸ்வெல் மீது இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement