காயத்தால் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியை தவறவிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர் – விவரம் இதோ

MI
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இன்னும் ஐபிஎல் தொடர் துவங்க சில நாட்களே எஞ்சியுள்ள வேளையில் பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட ஒரு இளம் வீரரும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இலங்கை அணியை சேர்ந்த 23 வயதான வேகப்பந்து வீச்சாளர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 4 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை அணி இடம் பிடித்து விளையாடி வந்த அவர் அந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது தொடைப்பகுதியில் காயமடைந்தார். அதனால் வங்கதேச அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் இருந்து அவர் விலகினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தில்ஷான் மதுஷங்கா இந்த காயத்திலிருந்து குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை காட்டிய ரிச்சா கோஸ்.. போராட்ட கண்ணீர் வெற்றியாக மாறிய சரித்திரம்

இதன் காரணமாக அவர் முதல் முறையாக ஐபிஎல் தொடரை விளையாட இருந்த வேளையில் அந்த வாய்ப்பை தவற விட்டுள்ளார். இருப்பினும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் நிச்சயம் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து விளையாடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement