- Advertisement -
உலக கிரிக்கெட்

ரசிகர்களின் பாராட்டுடன் விடைபெற்ற இயன் மோர்கன் – தரத்துக்கு சான்றாக படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்

வரலாற்றில் முதல் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டனாக சரித்திர சாதனை படைத்துள்ள இயன் மோர்கன் காயம் மற்றும் சுமாரான பாரம் காரணமாக தனது 35 வயதிலேயே கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுள்ளார். அயர்லாந்து நாட்டில் பிறந்து அந்த அணிக்காக சர்வதேச அரங்கில் 2006இல் அறிமுகமான இவர் அடுத்த சில வருடங்களில் பக்கத்து நாடான இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அவரின் திறமையை உணர்ந்த இங்கிலாந்து வாரியம் கடந்த 2009இல் தங்களது நாட்டுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பை கொடுத்து வரவேற்றது.

அதில் டெஸ்ட் போட்டிகளில் சுமாராக செயல்பட்ட அவர் ஒருநாள் மற்றும் டி20 எனப்படும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்தார். அதன்பின் 2014இல் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவரது தலைமையில் 2015 உலகக்கோப்பையில் களமிறங்கிய இங்கிலாந்து காலிறுதிப் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று அவமானத்துடன் வெளியேறியது.

- Advertisement -

அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் இனிமேல் தடுப்பாட்டம் வேலைக்காகாது என்பதை உணர்ந்து அதிரடி பாதையில் நடக்கத் துவங்கினார். அதற்கு முதலாவதாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் போன்ற அதிரடியை விரும்பும் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தொடர்ச்சியாக அதிக வாய்ப்பையும் ஆதரவையும் அளித்தார்.

உலககோப்பை நாயகன்:
அதன் பயனாக அடுத்த சில வருடங்களிலேயே அதிரடிப்படையாக மாறிய இங்கிலாந்து நிறைய ஒருநாள் மற்றும் டி20 இருதரப்பு தொடர்களை வென்றது. மேலும் தங்களது சொந்த மண்ணுக்கு வரும் எதிரணிகளை சரமாரியாக அடித்து 400க்கும் மேற்பட்ட ரன்களை அசால்டாக குவித்தது. அந்த நிலைமையில் சொந்த மண்ணில் நடைபெற்ற 2019 உலக கோப்பையில் அதே அதிரடியை பின்பற்றிய அவரது தலைமையிலான இங்கிலாந்து முதல் முறையாக தொடவே முடியாது என நினைத்துக்கொண்டிருந்த உலக கோப்பையை முத்தமிட்டு சரித்திரம் படைத்தது.

- Advertisement -

அதன்பின் அடிக்கடி காயங்களை சந்தித்த அவர் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறினார். குறிப்பாக 2021க்கு பின் சதமடிக்க முடியாமல் தவித்த அவர் சமீபத்திய நெதர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி கடைசி போட்டியில் காயத்தால் வெளியேறினார். அப்படி தொடர்ச்சியாக ஏற்பட்ட காயங்கள் நல்ல பார்முக்கு வருவதைத் தடுத்துக் கொண்டே இருந்த காரணத்தால் நாம் உருவாக்கிய அதிரடி இங்கிலாந்துக்கு தாமே பாரமாக மாறி விடக் கூடாது என்று கருதிய அவர் அர்ப்பணிப்புடன் தற்போது ஒட்டு மொத்த ரசிகர்களின் பாராட்டு மழையில் ஓய்வு பெற்றுள்ளார். இந்த சமயத்தில் அவரது தரத்தின் சான்றாக விளங்கும் சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

1. முதலில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுக்கும் சதமடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக சதமடித்த முதல் வீரர் என்ற சரித்திரத்தை படைத்துள்ளார்.

- Advertisement -

2. 225 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

3. 6957 ரன்களையும் 202 சிக்ஸர்களையும் விளாசியுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

3. 115 போட்டிகளில் 2458 ரன்களுடன் 120 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்சர்களை அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

உலகசாதனைகள்:
1. கேப்டனாக 233 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ள அவர் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த கேப்டன் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

2. கடந்த 2019 உலகக்கோப்பையில் மான்செஸ்டரில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 17 சிக்சர்களை அடித்த அவர் உலக கோப்பை வரலாற்றிலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

3. அதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் சிக்ஸர் வாயிலாக மட்டுமே 100 ரன்கள் (17*6=102 ரன்கள்) எடுத்த ஒரே பேட்ஸ்மேன் என்ற முரட்டுத்தனமான உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

4. மேலும் 42 வெற்றிகளுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். 2-வது இடத்தில் இந்தியாவின் தோனி 41 வெற்றிகளுடன் உள்ளார்.

இதையும் படிங்க : சந்தேகமே வேணாம். அவங்க டீம் பேட்டிங் செம ஸ்ட்ராங் தான். அயர்லாந்து பேட்ஸ்மேன்களை பாராட்டிய – இந்திய வீரர்

5. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 300க்கும் மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த அணியின் கேப்டனாகவும் (8 முறை) அவர் சாதனை படைத்துள்ளார். 2-வது இடம் : எம்எஸ் தோனி (7 முறை)

- Advertisement -
Published by