என்னுடைய உலகசாதனையை அவர் உடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே – சோயப் அக்தர் வெளிப்படை பேச்சு

Shoaib Akhtar
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் வீரர் உம்ரான் மாலிக் தனது அசுர வேக பந்துகளால் எதிரணிகளை திணறடிக்க கூடியவராக மிரட்டலாக பந்துவீசி வருகிறார். கடந்த 2021இல் தமிழக வீரர் நடராஜன் காயமடைந்ததால் அவருக்கு பதில் முதல் முறையாக ஒருசில போட்டிகளில் வாய்ப்பு பெற்றபோதே 145 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக வீசிய அவர் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி உட்பட பலரின் பாராட்டுக்களை அள்ளினார்.

- Advertisement -

அதன் காரணமாகவே எந்தவித யோசனையுமின்றி 4 கோடி என்ற பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் தக்க வைத்திருந்த நிலையில் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் முடிந்த அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

விவேகம் தேவைப்படும் வேகம்:
குறிப்பாக பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஜாம்பவான் மலிங்காவின் சாதனையை சமன் செய்தார். அதன்பின் குஜராத்துக்கு எதிரான போட்டியில் அசுர வேகத்தால் 5 விக்கெட்கள் எடுத்ததில் 4 கிளீன் போல்ட் விக்கெட்டுக்காக எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அத்துடன் டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் 157 கி. மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார்.

Umran Malik

அதன் காரணமாக இந்திய அணியில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. இருப்பினும் வேகத்திற்கு ஈடாக ரன்களையும் வாரிக்கொடுப்பதால் விவேகமில்லாத அவரின் வேகத்தில் எந்த பயனுமில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இந்தியாவில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடிய பவுலர் யாருமே இல்லாத காரணத்தால் நான் தேர்வு குழுத் தலைவராக இருந்தால் நிச்சயம் இந்திய அணியில் அவரை தேர்வு செய்வேன் என்று ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் தொடர்ந்து ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

உடைத்தால் மகிழ்ச்சி:
ஆனாலும் எதைப்பற்றியும் தொடர்ந்து கவலைப்படாமல் அதே வேகத்தை பயன்படுத்தும் அவர் நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கூட 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறார். தற்போது இளமையாக ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கும் அவர் நாளடைவில் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு நிச்சயம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக பந்தை பதிவு செய்துள்ள பாகிஸ்தானின் சோயப் அக்தர் சாதனையை முறியடிப்பார் என்ற பல ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.

Akhtar 1

இந்நிலையில் தமது உலக சாதனையை உம்ரான் மாலிக் முறியடித்தால் மிகவும் மகிழ்ச்சியே என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் முறையாக தொடர்ச்சியாக 150 கி. மீ வேகத்தில் வீசக்கூடிய ஒருவரை (உம்ரான்) பார்த்துள்ளேன். ஒருவேளை அவர் என்னுடைய சாதனையை முறியடித்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான். எனது சாதனையை கண்டிப்பாக உடையுங்கள். ஆனால் உங்களை உடைத்துக் கொள்ளாதீர்கள்.

- Advertisement -

அவர் நீண்ட நாட்கள் விளையாடுவார் என்று நம்புகிறேன். சில நாட்கள் முன்பு கூட 20 வருடங்களாகியும் உங்களது சாதனையை யாருமே முறியடிக்க முடியவில்லை என்று ஒருவர் கூறியதை கேட்டேன். ஆனால் சாதனை என்பது என்றாவது முறியடிக்கவே படைக்கப்படுகிறது என்ற வகையில் அதை உம்ரான் முறியடித்தால் மிகவும் மகிழ்ச்சியாக்கும்” என்று கூறினார்.

Umran Malik 5 Fer

சச்சின் டெண்டுல்கர் உட்பட பல உலகின் தரமான பேட்ஸ்மேன்ங்களையும் திணறடித்த சோயப் அக்தர் கடந்த 2003 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் 161.3 கி.மீ வேகப்பந்தை வீசி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தைவீசிய பவுலராக உலக சாதனை படைத்துள்ளார். 20 வருடங்களாகியும் அந்த உலக சாதனையை முறியடிக்க படாமல் இருந்து வரும் நிலையில் அதை உம்ரான் மாலிக் உடைத்தால் தமக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ள சோயப் அக்தர் அதற்காக அவர் தனது உடலை உடைத்து கொள்ளாமல் காயமின்றி நெடுநாட்கள் விளையாட வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : காயம் மாதிரி தெரில ! ஏதோ உள்குத்து நடக்குது, ஜடேஜா – ராயுடு விஷயத்தில் முன்னாள் வீரர்கள் சந்தேகம்

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் காயமடையாமல் தொடர்ச்சியாக விளையாடுவார் என்று நம்புகிறேன். அவர் காயமடைந்தால் அவரின் கேரியர் முடிந்துவிடலாம். அவரை உலக அரங்கில் பார்க்க விரும்பும் நான் 100 மைல்வேகத்தை தொட்டு ஸ்பெஷலான சாதனை படைக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement