ஹேப்பி பர்த்டே அதிரடி பொல்லார்ட் ! அலறவிடும் அம்பயர்களுக்கே டஃப் கொடுத்த 3 தருணங்கள்

pollard
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கைரன் பொல்லார்ட் மே 12-ஆம் தேதியான இன்று தனது 35-ஆவது நாளை கோலாகலமாக கொண்டாடுகிறார். கடந்த 2007இல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்து தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து 2012இல் டி20 உலகக் கோப்பை முதல் முறையாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்ற அவர் 2019 முதல் அந்த அணிக்கான வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். இருப்பினும் ஐபிஎல் உட்பட உலகின் அனைத்து டி20 தொடர்களிலும் கவனம் செலுத்துவதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Pollard

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த 2010 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் அந்த அணிக்கு தனது அதிரடி சரவெடியாக பேட்டிங்கால் தோல்வி உறுதி என நினைத்த போட்டிகளில் கூட பலமுறை எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். சொல்லப்போனால் இதுவரை அந்த அணி வென்ற 5 கோப்பைகளிலும் ஒரு ஆல்-ரவுண்டராகவும் பினிஷராகவும் முக்கிய பங்காற்றியுள்ள அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

பொல்லார்ட்டும் – அம்பயர்களும்:
அவரின் இந்த பிறந்த நாளில் அவர் இந்த சாதனை படைத்தார் அந்த சாதனை படைத்தார் என்று பார்க்காமல் வித்தியாசமாக ஒரு பதிவைப் பார்ப்போம். அதாவது இந்த வருட ஐபிஎல் 2022 தொடரில் இதுவரை பெரும்பாலான போட்டிகளில் சர்ச்சையான முடிவுகளை வழங்கி வரும் அம்பயர்கள் பல வீரர்களையும் அணிகளையும் அலறவிடுகிறார்கள்.

Pollard

குறிப்பாக இடுப்புக்கு மேலே நோ பால் என அம்பயர் அறிவிக்காததால் கடுப்பான ரிஷப் பண்ட் தனது அணி வீரர்கள் பெவிலியனுக்கு அழைத்தது பெரிய சர்ச்சையானது. ஆனால் பொதுவாகவே முரட்டுத்தன மனிதராக காட்சியளிக்கும் பொல்லார்ட் ஐபிஎல் வரலாற்றில் நிறைய தருணங்களில் அம்பயர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் வித்தியாசமான செயல்பாடுகளால் அவர்களுக்கே பல தருணங்களில் டஃப் கொடுத்துள்ளார். அதில் டாப் 3 தருணங்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. இந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை பங்கேற்ற 56-வது லீக் போட்டியில் 10-வது ஓவரை வீச வந்த அவர் முதல் பந்தில் பவுண்டரி வழங்கி அடுத்த 3 பந்துகளில் தலா 1 சிங்கிள் வழங்கினார். அந்த நிலைமையில் 5-வது பந்தை வீசிய அவரின் கையில் இருந்து நழுவிய பந்து நேராக பின்புறத்தில் நின்ற அம்பயர் கிரிஸ் கேப்னி மீது பட்டது.

நல்ல வேளையாக அது பெரிய வேகத்தில் வராத காரணத்தால் அம்பயர் தப்பித்ததை பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அதன்பின் சிரித்துக்கொண்டே அம்பயரிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் பொல்லார்ட் அவரிடம் பேசி சமாளித்தார். அதை கேப்டன் ரோஹித் சர்மா உட்பட பலரும் அனைவரும் பார்த்து சிரிப்பலை செய்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

2. 2019 ஐபிஎல் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் பரம எதிரிகளான மும்பையும் சென்னையும் பலப்பரீட்சை நடத்தின. வெறும் 1 ரன்கள் வித்தியாசத்தில் 4-வது முறையாக கோப்பையை மும்பை வென்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 89/4 என தடுமாறியபோது களமிறங்கிய பொல்லார்ட் 41* (25) அதிரடியாக விளாசி 149/8 ரன்கள் எடுக்க வைத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அந்த பரபரப்பான போட்டியில் 20-வது ஓவரை எதிர்கொண்ட அவருக்கு எதிராக 19.3-வது பந்தை ஒய்டாக ட்வயன் ப்ராவோ வீசினார். ஆனால் அதை ஒய்ட் என அப்பட்டமாக தெரிந்தும் அம்பயர் ஒய்ட் கொடுக்காததால் கடுப்பான பொல்லார்ட் அந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அதே அம்பயர் பார்க்கும் வகையில் தனது பேட்டை வானத்தை நோக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

1. 2015 ஐபிஎல் தொடரில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதிய ஒரு போட்டியில் மும்பை 209 ரன்கள் குவித்து அதன் பின் 18 ரன் வித்தியாசத்தில் வென்றது. அந்த போட்டியில் 210 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்ட முயன்ற மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் சூறாவளி புயல் கிறிஸ் கெயில் கவனத்தை திசை திருப்பும் வகையில் அவரின் அருகே சென்ற பொல்லார்ட் ஒருசில வார்த்தைகளை பேசினார்.

ஆனால் அதை தடுக்கும் வகையில் களத்திலிருந்த அம்பயர்கள் அவரிடம் ஸ்ட்ரிக்ட்டான வார்த்தைகளைக் கூறி அவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்று கண்டித்தனர். அதனால் கடுப்பான பொல்லார்ட் பிளாஸ்டிக் டேப்பை பயன்படுத்தி தனது வாயை ஒட்டிக் கொண்டு “இனிமேல் பேசமாட்டேன் சாமி” என்பது போல் கையசைத்து அம்பயர்களை கலாய்த்தார்.

இதையும் படிங்க : வினாடி நேரம், மின்னல் வேகம் ! ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்டம்பிங் செய்த டாப் 5 விக்கெட் கீப்பர்கள்

அதைப் பார்த்த வர்ணனையாளர்களும் களத்தில் இருந்த இதர மும்பை அணி வீரர்களும் ரசிகர்களும் சிரிப்பலையில் மூழ்க அன்றைய நாளில் அவர் செய்த சேட்டை ஐபிஎல் வரலாற்றில் காலத்திற்கும் மறக்காத ஒன்றாக அமைந்தது.

Advertisement