வினாடி நேரம், மின்னல் வேகம் ! ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்டம்பிங் செய்த டாப் 5 விக்கெட் கீப்பர்கள்

Dhoni-1
Dhoni Captain
- Advertisement -

ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் சிக்ஸர், ஒயிட், ரன் அவுட் என வெறும் ஒரு பந்தில் நிகழும் ஏதேனும் ஒரு தருணம் போட்டியின் வெற்றியை மொத்தமாக மாற்றக் கூடியதாகும். அந்த வகையில் ஐபிஎல் மட்டுமல்லாது அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பர்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். களத்தில் இருக்கும் 10 வீரர்கள் கூட போட்டியின் இடையே அவ்வப்போது பெவிலியனுக்கு சென்று ஒருசில நிமிடங்கள் களைப்பாறலாம். ஆனால் போட்டி முழுதாக முடியும் வரை விக்கெட் கீப்பர் என்பவர் நின்று களத்தில் பந்தை பிடித்து போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

Dhoni-2

- Advertisement -

அதனால் சாதாரணமாகவே எளிதில் களைப்படையும் அளவுக்கு வேலை செய்யும் அவர்கள் சுழல்பந்து வீச்சாளர்கள் பௌலிங் செய்யும் போது சற்று அதிகமாக உட்கார்ந்து எழுந்திருத்து தீயாய் வேலை செய்ய வேண்டும். அத்தனை சிரமங்களுக்கு மத்தியில் சுழல் பந்துவீச்சாளர்கள் பிரயோகிக்கும் பந்துகள் தாறுமாறாக சுழன்றால் அது எந்த திசையில் வருகிறது என்பதை சரியாக கணித்து பிடிக்க வேண்டியது மேலும் சிரமமான காரியமாகும். அதேபோல் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஏமாறும் பேட்ஸ்மென்கள் கேட்ச் கொடுத்தால் அதை ஒருசில வினாடிகளில் மின்னல் வேகத்தில் பிடிக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.

மேலும் பேட்ஸ்மேன்கள் வெள்ளை கோட்டுக்கு வெளியே சென்று அடிக்க முயன்று ஏமாந்தால் அப்போது பந்தை சரியாக பிடித்து ஸ்டம்பிங் செய்ய வேண்டிய அவசியமும் விக்கெட் கீப்பர்களுக்கு இன்றியமையாததாகும். அவர்கள் அதை சரியாக செய்தால் அதுவே போட்டியின் வெற்றிக்கும் ஒரு வித்தாக அமையும். ஆனால் கோட்டை விட்டால் அதுவும் தோல்விக்கு ஒரு படியாகி விடும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்டம்பிங் செய்து வெற்றிகளில் பங்காற்றிய டாப் 5 விக்கெட் கீப்பர்களை பற்றி பார்ப்போம்:

DC vs KKR Shreyas Iyer Rishabh Pant

5. ரிஷப் பண்ட்: 3 வகையான இந்திய அணியிலும் தற்போதைய நம்பர் ஒன் இளம் விக்கெட் கீப்பராக வலம்வரும் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சீறிப்பாயும் காளையாய் எதிரணிகளை மிரட்டுகிறார்.

- Advertisement -

ஆனாலும் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கும் அவர் விக்கெட் கீப்பிங்கில் ஒருசில தவறுகள் செய்தாலும் தற்போது நல்ல முன்னேற்றங்களை கண்டு வருகிறார். அதே போலவே ஐபிஎல் தொடரிலும் விளையாடி வரும் அவர் இதுவரை 95 போட்டிகளில் பங்கேற்று 17 ஸ்டம்பிங்களை 0.86 என்ற சராசரியில் செய்து இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

wriddhiman saha

4. ரித்திமான் சஹா: இந்தியாவின் அனுபவம் மூத்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சகா சமீபகால இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பிங் ஸ்பெஷலிஸ்ட் என்பதற்காகவே நிறைய போட்டிகளில் விளையாடியவர்.

- Advertisement -

அந்த அளவுக்கு சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விக்கெட் கீப்பிங் செய்யும் திறமை பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 138 போட்டிகளில் பங்கேற்று 20 ஸ்டம்பிங்களை 0.70 என்ற சராசரியில் செய்து இந்த பட்டியலில் 4-வது இடம் பிடித்துள்ளார்.

Uthappa

3. ராபின் உத்தப்பா: மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா ஐபிஎல் தொடரில் குறிப்பாக கொல்கத்தா அணியில் இருந்த போது விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

- Advertisement -

ஆனால் தற்போது சென்னை அணியில் விளையாடும் அவர் எம்எஸ் தோனி இருப்பதால் முழு பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். இருப்பினும் இதுவரை 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் விக்கெட் கீப்பராக 32 ஸ்டம்ப்பிங்களை 0.66 என்ற சராசரியில் எடுத்து இந்த பட்டியலில் 3-வது இடத்தை பிடிக்கிறார்.

dinesh-karthik-bcci

2. தினேஷ் கார்த்திக்: தமிழகத்தின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கருதப்படும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்ததால் பெருமளவு வாய்ப்பு கிடைக்காமல் காலத்தை கடத்திவிட்டார்.

இருப்பினும் ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதல் இன்றுவரை சென்னையை தவிர பெரும்பாலான அணிகளில் விளையாடி மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் அவர் 225 போட்டிகளில் 33 ஸ்டம்பிங்களை 0.79 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து இந்த பட்டியலில் 2-வது இடத்தில் ஜொலிக்கிறார்.

Dhoni 2

1. எம்எஸ் தோனி: உலக கிரிக்கெட்டில் சாதாரண பந்து பிடித்து போடுபவர்களாக இருந்த விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் மாற்றினார். அதேபோல் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமில்லாமல் அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டுமென்ற இலக்கணத்தை உருவாக்கிய எம்எஸ் தோனி இந்தியாவின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக சாதனை படைத்தவர்.

சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களை தோனிக்கு முன்பின் என 2 வகையாக பிரிக்கலாம். கேப்டன், பினிஷர் போன்ற பரிணாமங்களை கொண்ட அவர் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதிலும் வல்லவர். அதிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருசில நொடிகளில் பேட்ஸ்மேன்கள் வெறும் ஒருசில இன்ச்கள் க்ரீஸ்க்கு வெளியே காலை எடுத்தாலோ அல்லது தூக்கினாலோ கூட கச்சிதமாக ஸ்டம்பிங் செய்யும் திறமை பெற்ற அவரிடம் பேட்ஸ்மேன்கள் சற்று கவனமாகவே இருப்பார்கள்.

Dhoni

சர்வதேச கிரிக்கெட்டில் கில்கிறிஸ்ட், சங்கக்காரா போன்றவர்களை விட அதிக ஸ்டம்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ள அவர் 230 போட்டிகளில் 39 ஸ்டம்பிங்களை 0.84 என்ற சராசரியில் செய்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

Advertisement