சி.எஸ்.கே அணி சஞ்சு சாம்சனை வாங்க காரணமே இந்த ஒரு விடயம் தான் – ஹனுமா விஹாரி கருத்து

Hanuma Vihari
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் மாதம் அபுதாபியில் நடைபெற்று முடிந்தது. அந்த மினி ஏலத்தில் பங்கேற்றிருந்த 10 அணிகளை சேர்ந்த நிர்வாகங்களும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் தேர்வு செய்திருந்தது. இதன் காரணமாக பல்வேறு வீரர்களின் அணி மாற்றம் நிகழ்ந்திருந்தது.

சஞ்சு சாம்சனை சி.எஸ்.கே வாங்க காரணமே இதுதான் : ஹனுமா விஹாரி

மேலும் இந்த மினி ஏலத்திற்கு முன்னதாகவே ட்ரேடிங் முறையிலும் சில வீரர்களின் அணிமாற்றம் நடைபெற்றது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு மிகப்பெரிய டிரேடிங்காக பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனின் டிரேடிங்கும் இரு அணிகளின் சம்மதத்துடன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேடிங் செய்தது. தோனிக்கு சரியான மாற்றுவீரராக அவர் இருப்பார் என்பதாலேயே இந்த டிரேடிங் நடைபெற்றதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை டிரேடிங் செய்ததே அவர்களது வர்த்தக லாபத்தினை கருத்தில் கொண்டு தான் என்று இந்திய அணியின் வீரரான ஹனுமா விகாரி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சனை சி.எஸ்.கே அணி ஏலத்தில் எடுத்ததற்கு மிக முக்கியமான காரணம் அவருடைய ரசிகர்கள் பட்டாளம் தான்.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை கிரிக்கெட்டை மட்டும் யோசிக்க கூடாது. அப்படி யோசித்தால் அது மிகப்பெரிய தவறு. ஐபிஎல் ஓனர்கள் கிரிக்கெட்டை தாண்டி கமர்சியலாக வர்த்தக லாபத்தையும் பார்க்கக்கூடியவர்கள். அதனால் சிஎஸ்கே அணியும் தங்களது வர்த்தகத்திற்கு தேவையான ஒரு வீரரை வாங்க முயற்சித்து சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது என்று கூறுவேன்.

இதையும் படிங்க : கேப்டன்ஷிப் பதவி போன அப்றம் கோலி மாதிரி.. ரோஹித் அப்போரோச்சை மாத்தி ஆடுறாரு.. ஃகைப் பேட்டி

ஏனெனில் சஞ்சு சாம்சனிடம் இருக்கும் ரசிகர் பட்டாளம் என்பது மிகப்பெரியது. அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடினால் கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் அவர் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக சிஎஸ்கே அணியின் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பும். அதனால் சிஎஸ்கே அணியின் வர்த்தக லாபமும் உயரும். அதனால் தான் சி.எஸ்.கே அணியில் ஏகப்பட்ட துவக்க வீரர்கள் இருந்தும் சஞ்சு சாம்சன் வாங்கப்பட்டுள்ளார் என்று ஹனுமா விஹாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement