கேப்டன்ஷிப் பதவி போன அப்றம் கோலி மாதிரி.. ரோஹித் அப்போரோச்சை மாத்தி ஆடுறாரு.. ஃகைப் பேட்டி

Mohammad Kaif
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அத்தொடரில் இந்திய அணிக்காக நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்த்தது உண்டாக்கியுள்ளது.

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அடுத்தடுத்த 2 ஐசிசி கோப்பைகளை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது. அந்த வெற்றிகளுக்கு சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ரோஹித் சர்மாவின் அணுகுமுறை முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் தற்போது அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் 2027 உலகக் கோப்பைக்கு புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது.

- Advertisement -

ரோஹித் ஆட்டத்தில் மாற்றம்:

அதற்காக அசராத ரோஹித் சர்மா தொடர்ந்து சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடி பெரிய ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் விளையாட முயற்சித்து வருகிறார். இந்நிலையில் கேப்டன்ஷிப் பொறுப்பு பறிக்கப்பட்டதிலிருந்து ரோஹித் சர்மா தன்னுடைய அணுகுமுறையை மாற்றியுள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். குறிப்பாக கேப்டனாக இருந்த போது தன்னுடைய ஸ்கோரை பற்றி கவலைப்படாமல் ரோஹித் சர்மா பவுண்டரிகளை வெளுத்து வாங்கியதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது கேப்டனாக இல்லாததால் அணியில் தமக்கான இடத்தைப் பிடிக்க விராட் கோலி போல ரோஹித் சர்மா விளையாடுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஃகைப் பேசியது பின்வருமாறு. “தற்போது ரோஹித் சர்மா தனது இன்னிங்ஸை வேகப்படுத்துவதை என்னால் பார்க்க முடிகிறது”

- Advertisement -

விராட் கோலி போல:

“இப்போதெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை வேகமாக துவங்கும் அவர் பின்னர் அதை மெதுவாக்கி சிங்கிள் டபுள் ரன்களை எடுத்து விராட் கோலி போல அவ்வப்போது பௌண்டரிகள் அடிக்கிறார். இப்போதெல்லாம் அவர் தொடர்ச்சியாக பவுண்டரிகளை துரத்துவதில்லை. மாறாக தன்னுடைய ஆட்டத்தின் வேகத்தை திட்டமிடும் அவர் பெரிய இன்னிங்ஸ் விளையாடுகிறார். சமீபத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பின் அவரிடம் நாம் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது”

இதையும் படிங்க: அபிஷேக், சாம்சன் இல்ல.. அவரால் தான் கோலி மாதிரி 2026 டி20 உ.கோப்பையில் அசத்த முடியும்.. பதான் பேட்டி

“அவருடைய நோக்கம் மாறியுள்ளது. இப்போதெல்லாம் அவர் பெரிய ஆட்டத்தை விளையாடி நாட் அவுட்டாக இருக்க விரும்புகிறார். அதற்கு எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவில் அவர் அடித்த சதத்தை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். அப்போட்டியில் பெரிய இன்னிங்ஸ் விளையாடிய அவர் அவுட்டாகாமல் இருந்தார். அதுவே வரும் போட்டிகளில் அவருடைய திட்டமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது” என்று கூறினார்.

Advertisement