அபிஷேக், சாம்சன் இல்ல.. அவரால் தான் கோலி மாதிரி 2026 டி20 உ.கோப்பையில் அசத்த முடியும்.. பதான் பேட்டி

Irfan Pathan
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்குகிறது. அத்தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு இம்முறை விராட் கோலி போல ஒரு பேட்ஸ்மேன் விளையாடுவது அவசியமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அக்சர் பட்டேலுடன் சேர்ந்து நங்கூரமாக விளையாடிய அவர் அரை சதமடித்து இந்தியா பெரிய ரன்கள் குவிக்க உதவி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் இம்முறை விராட் கோலி போல விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றும் திறமையை திலக் வர்மா கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலி போல:

அதற்கு எடுத்துக்காட்டாக 2025 ஆசியக் கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை திலக் வர்மா நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி வெற்றி பெற வைத்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அப்படிப்பட்ட திறமை அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சனிடம் கூட இல்லையென்று பதான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“திலக் வர்மா 3, 4வது இடங்களில் அழுத்தத்தை உள்வாங்கி விளையாடி சதங்கள் அடித்துள்ளார். அத்துடன் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அற்புதமான ஆட்டத்தை விளையாடினார். ஒருவேளை அவரது ஆட்டம் இல்லாமல் போயிருந்தால் இந்தியா வென்றிருக்காது. அந்த வகையில் திலக் தன்னுடைய பங்கை அதிவேகமாக உயர்த்தியுள்ளார். அது போன்ற ஆட்டத்தை பொதுவாக விராட் கோலி வெளிப்படுத்துவார்”

- Advertisement -

திலக் வர்மா:

“மிகப்பெரிய வீரரான விராட் கோலி அழுத்தத்தை உள்வாங்கி விளையாடுவதில் சிறந்தவர். கடந்த டி20 உலகக்கோப்பையில் அவர் பெரும்பாலான போட்டிகளில் அசத்தவில்லை. ஆனால் மக்கள் அவர் ஃபைனலில் அசத்துவார் என்று நம்பினார்கள். அதே போலவே ஃபைனலில் நெருப்பாக விளையாடாத அவர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அசத்தினார்”

“அப்படிப்பட்ட வீரர்கள் ரன்கள் அடித்தால் தான் இந்திய பவுலர்களால் போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதற்காக பவுலர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றாலும் விராட் கோலி சரியான சமயத்தில் அப்படிப்பட்ட இன்னிங்ஸை விளையாடினார். அதே போல ஆசிய கோப்பை ஃபைனலில் திலக் வர்மா விளையாடினார்”

இதையும் படிங்க: இதனால தான் ரோஹித்தை விட கோலி பெஸ்ட்.. அவரை பாத்து ரோஹித்தும் இதை செய்யனும்.. ஃகைப் பேட்டி

“சாம்சன், துபே ரிஸ்க் எடுத்து விளையாடியதும் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. சாம்சன் வேகமாக விளையாடக்கூடியவர் என்றாலும் நிலையாக அசத்தக்கூடியவர் அல்ல. அதிக ரிஸ்க் எடுத்து விளையாடக்கூடிய அபிஷேக் சர்மா இறுதிப்போட்டியில் ஸ்கோரை தவற விட்டார். அவருக்கு எதிராக எதிரணிகள் சிறந்த திட்டங்களை வகுப்பார்கள் என்பதால் விக்கெட்டுகளை இழக்கவும் அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement