இதனால தான் ரோஹித்தை விட கோலி பெஸ்ட்.. அவரை பாத்து ரோஹித்தும் இதை செய்யனும்.. ஃகைப் பேட்டி

Mohammed Kaif 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக அத்தொடரின் முதல் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா தம்முடைய ஆட்டத்தை நன்றாக துவங்கிய போதிலும் 26 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அபாரமாக விளையாடி 93 ரன்கள் குவித்து இந்திய அணியில் வெற்றியின் முக்கிய பங்காற்றினார். தற்சமயத்தில் ஐசிசி தரவரிசையில் அவர்கள் இருவருமே டாப் 2 பேட்ஸ்மேன்களாக ஜொலித்து வருகின்றார்கள்.

- Advertisement -

விராட் கோலி பெஸ்ட்:

அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கும் அவர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் முதல் போட்டியை போல விராட் கோலி நல்ல துவக்கத்தை பெரும்பாலும் தொடர்ச்சியாக பெரிய ரன்களாக மாற்றும் திறமையுடையவர் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அதனாலேயே ரோஹித்தை விட ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி சிறந்து விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

எனவே விராட் கோலியை போல ரோஹித் சர்மாவும் தமக்கு கிடைக்கும் நல்ல துவக்கத்தைக் எளிதாக விட்டுக் கொடுக்காமல் பெரிய ரன்களாக மாற்ற விரும்புவார் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ஃகைப் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் பெயர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் பெரிதாக இருக்கிறது? ஏனெனில் அவர் எப்போதும் 30 – 40 ரன்கள் செட்டிலாவதில்லை”

- Advertisement -

ரோஹித் சர்மா விரும்புவார்:

“மொத்த கேரியரை பார்க்கும் போது அது தான் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இடையேயான வித்தியாசமாக இருக்கிறது. விராட் கோலி தன்னுடைய துவக்கங்களைப் பெரிதாக மாற்றுகிறார். 30 – 40 ரன்கள் எடுத்தால் அவர் கடைசி வரை நின்று வெற்றி பெறுவார். ஒருவேளை ஃபார்மில் இருந்தால் அவர் தொடர்ச்சியாக விளையாடுவார்”

இதையும் படிங்க: விமர்சித்த என்கிட்ட ராணா இதை நிரூப்பிச்சு காட்ட துவங்கிருக்காரு.. இதான் க்ளாஸிக் ராகுலின் தரம்.. ஸ்ரீகாந்த் பாராட்டு

“அதனாலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே ரோஹித்தை விட விராட் முன்னிலையில் இருக்கிறார். தொடர்ச்சியாக ஸ்கோர் செய்யும் அவர் தொடர்ந்து பெரிய இன்னிங்ஸ் விளையாடுகிறார். ரோஹித் சர்மாவும் தற்போது அதே பாதையில் செல்ல விரும்புவார். ஏனெனில் அவரிடம் இன்னும் ஓரிரு வருடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் 30 – 40 ரன்கள் அடிப்பதில் திருப்தியடைய மாட்டார். அதனாலேயே முதல் போட்டியில் தவறான ஷாட்டை அடித்து அவுட்டான போது அவர் தன்னுடைய தலையை அசைத்துக் கொண்டே வெளியேறினார்” என்று கூறினார்.

Advertisement