விமர்சித்த என்கிட்ட ராணா இதை நிரூப்பிச்சு காட்ட துவங்கிருக்காரு.. இதான் க்ளாஸிக் ராகுலின் தரம்.. ஸ்ரீகாந்த் பாராட்டு

Kris Srikkanth 2
- Advertisement -

நியூஸிலாந்துக்கு எதிராக வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் ` போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 301 ரன்கள் இலக்கை இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து தொட்டு வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா 26, கேப்டன் கில் 56, விராட் கோலி 93, ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் அடித்து குவித்து முக்கிய பங்காற்றினார்கள்.

இருப்பினும் முக்கிய நேரத்தில் அவுட்டான அவர்களைத் தொடர்ந்து வந்த ஜடேஜாவும் சொற்ப ரன்னில் அவுட்டானதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது களமிறங்கிய ஹர்ஷித் ராணா அதிரடியாக 29 (23) ரன்கள் விளாசி திருப்புமுனையை உண்டாக்கினார். அதை வீணடிக்காமல் கே.எல். ராகுல் 29* (21), சுந்தர் 7* ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

- Advertisement -

அசத்திய ராணா:

முன்னதாக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த ஹர்ஷித் ராணா முதல் போட்டியில் நியூஸிலாந்தின் 117 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதே போல பேட்டிங்கில் முக்கிய ரன்கள் குவித்த அவர் தம்மை விமர்சித்தவர்களை பாராட்ட வைக்கும் வகையில் அசத்தினார் என்றே சொல்லலாம். இந்நிலையில் சுமாராக விளையாடியதால் விமர்சித்த தம்மை போன்ற முன்னாள் வீரர்களிடம் ராணா திறமையை நிரூபிக்க துவங்கியுள்ளதாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.

அதே போல சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடி போட்டியை ஃபினிஷிங் செய்த கேஎல் ராகுலையும் அவர் பாராட்டி பேசியது பின்வருமாறு. “ராணாவை நான் அதிகப்படியாக விமர்சித்துள்ளேன். அந்த சமயத்தில் அவருக்கு அப்படிப்பட்ட விமர்சனம் தேவைப்பட்டது. நீங்கள் எப்போதுமே நிரூபிப்பதற்கு ஒரு அர்த்தத்தை விரும்புவீர்கள். அதே போல அவரும் ஒரு புள்ளியை நிரூபிக்க முயற்சிக்கிறார். அந்த வகையில் பாருங்கள் சீக்கா நான் ஒரு முறையான ஆல் ரவுண்டர் என்பதை அவர் நிரூபிக்க முயற்சிக்கிறார்”

- Advertisement -

ஸ்ரீகாந்த் பாராட்டு

“சீக்கா சார், நான் ஒரு மோசமான பவுலிங் ஆல் ரவுண்டர் கிடையாது என்பதை அவர் காண்பிக்கத் தொடங்கியுள்ளார். அவரால் விக்கெட் எடுக்க முடிவது முக்கியமானது. விக்கெட் எடுக்கும் திறமை எப்போதும் முக்கியமானது. அதை தற்போது ராணா செய்வது சிறப்பானது. அதே போல ஜடேஜாவுக்கு பின் கேஎல் ராகுல் பேட்டிங் செய்ய வந்ததன் தேற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க: 38 ரன்கள் மட்டுமே தேவை.. ஜாக் காலிஸ்ஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

“இருப்பினும் அவரை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் அனுப்பலாம். ஓப்பனிங் அல்லது 4 அல்லது 6வது இடத்தில் விளையாட வைத்தாலும் ராகுல் உங்களுக்கு போட்டிகளை வென்று கொடுப்பார். அது தான் உங்களுக்கு கிளாஸிக் கேஎல் ராகுலின் திறமையாகும். ஹர்ஷித் ராணாவுடன் சேர்ந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement