நான் 6 ஆவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாட இதுவே காரணம் – விஹாரி ஓபன் டாக்

Vihari-1
- Advertisement -

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக விகாரி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமான அந்தத் தொடரிலேயே சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஹனுமா விஹாரி.

vihari 2

- Advertisement -

அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய அவர் முதல் போட்டியில் 93 ரன்களில் சதத்தை தவறவிட்டாலும் அடுத்த போட்டியில் சதமடித்து தனது திறமையை நிரூபித்தார். ரோஹித்துக்காக பதிலாக அவருக்கு இடம் பெற்றதால் அவர் மீது இருந்த கூடுதல் அழுத்தத்தையும் மீறி தனது அபார ஆட்டத்தின் மூலம் அனைவருக்கும் பதிலளித்தார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் செயல்பாடு குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : இந்திய அணிக்கு விளையாடுவது பெருமையான விடயமாகும் அதிலும் குறிப்பாக ரஹானேவுடன் களமிறங்கி விளையாடுவதால் எனக்கு அது சற்று சவாலான விடயமாகவே இருக்கிறது. ஏனெனில் முன்பே விக்கெட்டுகள் வீழ்ந்தால் அதிலிருந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

நான் 6ஆவது இடத்தில் இறங்கி விளையாடும்போது அதிகஅளவு பந்து வீச்சாளர்கள் உடன் பேட்டிங் செய்யும் நிலை ஏற்படும். அப்படி நாம் பந்து வீச்சாளர்களுடன் பேட்டிங் செய்யும்போது அதிக அளவில் அதிக ரன்களை சேர்க்க வேண்டும். பந்துவீச்சாளர்களுடன் பேட்டிங் செய்யும் போது அதிகஅளவு நானே பேட்டிங் செய்ய நினைப்பேன் அப்போதுதான் விக்கெட்டுகளை இழக்கவிடாமல் அணியை நல்ல இடத்திற்கு அழைத்து செல்லமுடியும். மேலும் நான் அதுபோன்ற சூழலில் எனது மனநிலையை சரிசமமாக நிதானமாக வைத்து அதிரடியாக ஆடுவேன் அதனாலே என்னால் 6 ஆவது இடத்திலும் சிறப்பாக ஆடமுடிகிறது என்று விஹாரி கூறினார்.

Advertisement