35 வயசுல அவரே கம்பேக் கொடுத்திருக்காரு. எனக்கு என்ன? என்னோட இடத்தை பிடிக்காம விடமாட்டேன் – ஹனுமா விஹாரி கருத்து

Vihari
- Advertisement -

இந்திய அணியின் இளம் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் என 839 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணியில் புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்கு அடுத்து மிடில் ஆர்டரில் அந்த இடத்தை பலப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஹாரி மிகச்சிறப்பாகவே விளையாடி வந்தார்.

vihari

- Advertisement -

இருப்பினும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து கழட்டி விடப்பட்ட அவர் அதன்பிறகு காயமடைந்த அணியிலிருந்து விலகியிருந்த நிலையில் தற்போது அவர் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து அந்த சூழலில் இருந்து மீண்ட நிலையிலும் அவரை இந்திய அணியின் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து ஒருமுறை கழற்றிவிடப்பட்டால் மீண்டும் கம்பேக் கொடுப்பது கடினம் தான் என்று வெளிப்படையாகவே விஹாரி ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் இருந்து ஒரு முறை நீக்கப்பட்டால் நிச்சயம் மீண்டும் இடம் பிடிப்பது கடினமான ஒன்று. இப்படி அணியில் இடம் பெறாமல் இருக்கும் வேளையில் நம்மை அது மிகவும் வருத்தம் அடையச் செய்யும். ஆனாலும் நான் என்னுடைய முயற்சியை கைவிடப் போவதில்லை.

Vihari-1

எப்பொழுதுமே நம்மிடம் சரியான முயற்சி இருந்தால் மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியும். 35 வயதில் ரஹானே மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்து இருக்கிறார். அதே வேளையில் தற்போது எனக்கு 29 வயது தான் ஆகிறது. என்னால் ஏன் கம்பா கொடுக்க முடியாது நிச்சயம் அவரை முன்மாதிரியாக கொண்டு என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்.

- Advertisement -

ஒருவேளை அப்படி எனக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் நான் ஓய்வு முடிவை அறிவிக்கும் வரை நிச்சயம் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் முயற்சியினை தான் மேற்கொள்வேன் என ஹனுமா விஹாரி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

இதையும் படிங்க : வீடியோ : அந்த மனசு தான் சார் கடவுள், வெ.இ இளம் வீரர்களிடம் அன்பை காட்டிய சிராஜ் – அட்வைஸ் கொடுத்த அஸ்வின்

தற்போதைக்கு நான் உள்ளூர் தொடர்களில் என்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறேன். இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து அதிகம் யோசிக்கப்போவதில்லை என்னுடைய திறனை நான் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் மீண்டும் இந்திய அணியில் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என விஹாரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement