- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதுகெலும்பான புஜாரா இல்லாதது பெரிய இழப்பு.. அந்த 2 பேர் தான் இந்தியாவை காப்பாத்தனும்.. ஹனுமா விஹாரி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா வரலாறு படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் லட்சியத்துடன் இந்தியா விளையாட உள்ளது.

இந்நிலையில் புஜாரா இல்லாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஹனுமா விஹாரி கூறியுள்ளார். 2018/19 தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார். 2020/19 தொடரில் பாறையைப் போல் அதிக பந்துகளை எதிர்கொண்டு உடம்பில் அடிவாங்கிய புஜாரா மீண்டும் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

புஜாரா இடம்:

அந்த வகையில் கடந்த 2 தொடர்களில் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற புஜாரா இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக செய்யப்பட்டதாக விஹாரி தெரிவித்துள்ளார். இருப்பினும் இம்முறை ஃபார்மில் இல்லாததால் கழற்றி விடப்பட்ட புஜாராவின் இடத்தை விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிரப்பி இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றும் விஹாரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “புஜாரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். கடந்த 2 தொடர்களில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்தார். தன்னுடைய உடம்பில் நிறைய அடிகளை வாங்கிய அவர் களத்தில் அதிக நேரம் விளையாடி புதிய பந்தை எதிர்கொண்டு ரன்கள் குவித்தார். அவர் மற்ற பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கினார். எனவே அவரைப் போன்ற வேலையை இம்முறை யார் செய்வார் என்பதை கேள்வியாகும்”

- Advertisement -

ராகுல், விராட் கோலி:

“ஏனெனில் தற்போதைய பேட்டிங் வரிசையில் அனைவருமே அட்டாக் செய்யும் பேட்ஸ்மேன்களாக இருப்பதை நான் பார்க்கிறேன். விராட் கோலி மட்டுமே மற்ற பேட்ஸ்மேன்களுடன் நங்கூரமாக விளையாடுபவராக இருப்பதாக நான் கருதுகிறேன். ஆஸ்திரேலியாவில் பேட்டிங் என்பது நேரத்தை பொறுத்ததாகும். அங்கே பழைய கூக்கபுரா பந்தை விட புதிய பந்து கொஞ்சம் எளிதாக இருக்கும். அங்கே தான் கேஎல் ராகுல் வேலை முக்கியமாக இருக்கும்”

இதையும் படிங்க: என்னை விட தோனி தான் சிறந்த கீப்பர்.. நான் செய்யாததை செஞ்சுருக்காரு.. ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு

“ஏனெனில் வெளிநாடுகளில் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியும். கடந்த காலங்களில் வெளிநாடுகளில் அவர் நன்றாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 6வது இடத்தில் விளையாட வைப்பதற்காகவே தற்போதைய வங்கதேச தொடரில் சர்பராஸ்க்கு பதிலாக அவரை 6வதாக விளையாட வைக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் சரிவை ஏற்படும் போது அல்லது 2வது புதிய பந்தை எதிர்கொள்ள ராகுல் போன்ற அனுபவமிக்கவர் தேவை” என்று கூறினார்.

- Advertisement -