சர்வதேச கிரிக்கெட்டில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். சொல்லப்போனால் சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களை கில்கிறிஸ்ட்க்கு முன் பின் என 2 வகையாக பிரிக்கலாம். அந்தளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கில்கிறிஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 96 போட்டிகளில் 5570 ரன்களை 17 சதங்களையும் அடித்துள்ளார்.
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனைகளை அவர் படைத்துள்ளார். அதே போல 2007, 2011 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் விக்கெட் கீப்பர்களுக்கு இலக்கணமாக திகழ்கிறார். மறுபுறம் எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான விக்கெட் கீப்பராக போற்றப்படுகிறார்.
சிறந்த கீப்பர் தோனி:
கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே அதிரடியாக விளையாடி மேட்ச் வின்னராக உருவெடுத்தார். அதனால் புதிய கீப்பர்கள் என்றால் கீப்பிங் மட்டும் செய்யாமல் அதிரடியாக பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்ற தற்போதைய இலக்கணத்தை தோனி உருவாக்கினார். அத்துடன் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்வதில் வல்லவரான தோனி உலகிலேயே குமார் சங்ககாரா, மார்க் பவுச்சர், கில்கிறிஸ்ட்டை முந்தி அதிக ஸ்டம்பிங் செய்த கீப்பராக உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் உலக விக்கெட் கீப்பர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுக்குமாறு சமீபத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதில் முதலாவதாக பாகிஸ்தானின் மொயின் கானை விட இலங்கையின் ரோமேஸ் கழுவித்தரனா சிறந்த கீப்பர் என்று கில்கிறிஸ்ட் தேர்வு செய்தார். அதன் பின் மார்க் பவுச்சர், ஜேக் ரசல், இயன் ஹீலி ஆகியோரை விட ஜிம்பாப்வேவின் ஆண்டி பிளவர் சிறந்த கீப்பர் என்றும் கில்கிறிஸ்ட் தேர்ந்தெடுத்தார்.
கில்கிறிஸ்டின் பெருந்தன்மை:
இறுதியாக கில்கிறிஸ்ட் – தோனி ஆகியோரில் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் தம்மை விட தோனி தான் சிறந்த விக்கெட் கீப்பர் என்று கில்கிறிஸ்ட் பதிலளித்தது பின்வருமாறு. “எம்எஸ் தோனி. அவர் இங்கே வெல்ல வேண்டிய ஒவ்வொரு சாத்தியமான கோப்பைகளையும் வென்றுள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: வங்கதேசம் 74/2.. எனக்கே பாடம் எடுத்துட்டியே.. ஆகாஷ் தீபை வியந்து பாராட்டிய கேப்டன் ரோஹித்.. நடந்தது என்ன?
அதாவது தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2 ஆசிய கோப்பை, 5 ஐபிஎல் கோப்பை, 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்றுள்ளார். அந்த வகையில் தம்மை விட அதிகமான கோப்பைகளை வென்றுள்ள தோனி தான் சிறந்த கீப்பர் என்று கில்கிறிஸ்ட் பெருந்தன்மையுடன் பாராட்டினர். கிரிக்கெட் டாட் காம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



