இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கியது. 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் பாகிஸ்தானை போல எங்களை வீழ்த்துவது சுலபமல்ல என்று வங்கதேசத்துக்கு காண்பித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
அந்த சூழ்நிலையில் மழையால் தாமதமாக காலை 10.30 மணிக்கு துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு 24 பந்துகளை எதிர்கொண்ட ஜாகிர் ஹாசன் 0 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் அவுட்டானார்.
வியந்த ரோஹித் சர்மா:
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சாத்மன் இஸ்லாம் நங்கூரமாக விளையாடி 36 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை பெற்று இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். அப்போது ஆகாஷ் தீப் வீசிய 13வது ஓவரின் முதல் பந்தை அவர் சரியாக அடிக்கத் தவறினார். அந்த பந்து அவருடைய வலது காலில் பட்டதை தொடர்ந்து ஆகாஷ் தீப் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்குமாறு நடுவரிடம் வெறித்தனமாக முறையிட்டு கேட்டார்.
ஆனால் அதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததை தொடர்ந்து உடனே ரிவியூ எடுக்கலாம் என்று ஆகாஷ் தீப் சைகை செய்தார். இருப்பினும் பந்து மேலே சென்றிருக்கும் என்று சொன்ன ரோஹித் சர்மா அதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்தார். அத்துடன் விக்கெட் கீப்பரிடம் கேட்ட போது ரிஷப் பண்ட் “எடுத்துப் பார்க்கலாம்” என்று சொன்னதை தொடர்ந்து ரோஹித் சர்மா இரு மனதாக ரிவியூ எடுத்தார்.
அசத்தும் ஆகாஷ் தீப்:
அதைத் தொடர்ந்து மூன்றாவது நடுவர் சோதித்த போது பந்து லெக் ஸ்டம்ப்பில் அடித்தது தெளிவாக தெரிந்தது. அதை கொஞ்சமும் எதிர்பார்க்காத கேப்டன் ரோஹித் சர்மா “இதை நம்பவே முடியவில்லை. எனக்கே பாடம் எடுத்துட்டியே” என்பது போன்ற வியப்பான ரியாக்சன் கொடுத்து ஆகாஷ் தீப் முகத்தை தடவி பாராட்டு தெரிவித்தார் அதே போல விராட் கோலி உள்ளிட்ட மற்ற வீரர்களும் நம்ப முடியாமல் பாராட்டினர்.
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்கு மென்டராக மாறியது ஏன்? – பிராவோ விளக்கம்
அதனால் சாத்மன் இஸ்லாம் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் சாண்டோ 28* ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வருகிறார். அவருடன் மோனிமுல் ஹைக் 17* ரன்களுடன் பேட்டிங் செய்து வருகிறார். அதனால் முதல் நாள் உணவு இடைவெளியில் வங்கதேசம் 74-2 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.



