புஜாராவின் நீக்கத்தால் அணியில் நிரந்தர இடம்பிடிக்கப்போகும் இளம்வீரர் – நீண்ட நாளுக்கு பிறகு அடித்த ஜாக்பாட்

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியில் பல மாற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்து நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் சில சீனியர் வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியது.

- Advertisement -

அதன்படி மூன்றாவது இடத்தில் இருந்த புஜாரா நீக்கப்பட்டு அந்த வரிசையில் கோலி விளையாடுவார் என்று தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் விளையாடி வரும் கோலி நிச்சயம் மூன்றாவது இடத்தில் இறங்குவதன் மூலம் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதாலும் 2019ஆம் ஆண்டு முதலே பேட்டிங்கில் சொதப்பி வரும் புஜாராவிற்கு நல்ல இன்னிங்ஸ் கிடைக்காததாலும் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில் கோலி மூன்றாவது இடத்திற்கு வரும்போது நான்காவது இடத்தில் ரஹானேவும், ஐந்தாவது இடத்தில் பண்ட்டும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. இதனால் ஆறாவது இடத்தில் ஹனுமா விஹாரி விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 27 வயதான விஹாரி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 624 ரன்களை குவித்துள்ளார்.

Vihari

டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றார் போல் சிறந்த தடுப்பாட்டம் விளையாடும் விஹாரிக்கு இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இருப்பினும் தற்போது புஜாராவின் நீக்கத்தால் அவருக்கு ஆறாவது இடத்தில் இறங்க ஜாக்பாட் அடித்துள்ளது. மேலும் அவர் நிரந்தரமாக அந்த இடத்தில் நீடிப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் விகாரி எப்போதும் 6 ஆவது இடத்தில் விளையாடி பழக்கப்பட்டவர்.

vihari 2

அதுதவிர போட்டியை சிறப்பாக கடைசி வரை கொண்டு செல்லும் அளவிற்கு திறமை உடையவர் என்பதனால் அவர் நிச்சயம் ஆறாவது இடத்திற்கு தகுதியானவர் என்றே கூறலாம். இதன்காரணமாக புஜாராவின் நீக்கத்தால் விஹாரிக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement