8 ஆவது வீரராக களம் புகுந்து மிரட்டல் சாதனையை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் – இலங்கை அணிக்கு எதிராக நடந்த சம்பவம்

Atkinson
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வேகப்பந்து வீச்சாளர் படைத்த சாதனை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 427 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இலங்கை அணியானது 196 ரன்களை மட்டுமே குவித்ததால் தற்போது இங்கிலாந்து அணி 231 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் அனுபவரீரான ஜோ ரூட் 143 ரன்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 33-ஆவது சதத்தை பதிவு செய்திருந்தார். அதேபோன்று அவரைவிட ஒரு படி மேலாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான அட்கின்சன் சதம் அடித்து அசத்தலான சாதனையும் நிகழ்த்தி இருந்தார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் : இங்கிலாந்து அணிக்காக கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு எட்டாவது இடத்தில் களமிறங்கிய ஒரு வேகப்பந்து வீச்சாளர் சதம் அடிப்பது இதுவே முதல்முறை. இந்த போட்டியில் 115 பந்துகளை சந்தித்த அட்கின்சன் 14 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 118 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : கடந்த 4 ஆண்டுகளில் சரிந்த விராட் கோலி கரியர்.. ஆனால் உச்சத்திற்கு சென்ற ஜோ ரூட் – என்ன நடந்தது?

அவரது இந்த அசத்தலான ஆட்டத்தை பார்த்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் கூறுகையில் : அட்கின்சன் பேட்டிங்கை பார்க்கும் போது தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் பேட்டிங் செய்வதை பார்ப்பது போன்றே இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவரிடம் நல்ல திறமை இருக்கிறது என ரூட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement