கடந்த 4 ஆண்டுகளில் சரிந்த விராட் கோலி கரியர்.. ஆனால் உச்சத்திற்கு சென்ற ஜோ ரூட் – என்ன நடந்தது?

Root and Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் என்று பலராலும் புகழப்பட்டு வந்தவர். அந்த அளவிற்கு அவரது செயல்பாடுகள் சர்வதேச கிரிக்கெட்டில் அனைவரையும் வியக்க வைத்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இன்றளவும் உலகின் நம்பர் ஒன் வீரராகவே திகழ்ந்து வருகிறார். அண்மையில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

உச்சம் தொட்ட ஜோ ரூட் :

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் டெஸ்ட் கரியர் சரிவுக்கு வந்துள்ளதையும் அதே வேளையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கரியர் உச்சத்தை தொட்டுள்ளதையும் குறித்த தகவல் வெளியாகி தற்போது கோலியின் ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2020-ஆம் ஆண்டு லாக் டவுனுக்கு முன்பு வரை விராட் கோலி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் லாக்டவுனுக்கு பிறகு அவரது பார்ம் சரிந்ததை நாம் கண்கூடாக பார்க்க முடிந்தது. குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க முடியாமலும் தவித்து வந்ததை கண்டிருந்தோம்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பெரிய சரிவை சந்தித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு முடிவில் விராட் கோலி 27 டெஸ்ட் சதங்களை அடித்திருந்தார். அந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 26 சதங்கள், கேன் வில்லியம்சன் 21 சதங்கள், ஜோ ரூட் 17 சதங்கள் என அனைவரும் அவருக்குப் பின்பு இருந்தனர்.

- Advertisement -

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் விராட் கோலி இரண்டு சதம் மட்டுமே அடித்து தற்போது 29 டெஸ்ட் சதங்களுடன் உள்ளார். ஆனால் ஜோ ரூட் இந்த நான்கு ஆண்டுகளில் 17 சதங்கள் கூடுதலாக அடித்து தற்போது 33 சதங்களுடன் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டனான அலைஸ்டர் குக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : 14 ஃபோர்ஸ் 4 சிக்ஸ்.. இலங்கையை துவம்சம் செய்த டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன்.. இங்கிலாந்துக்காக 55 வருட சாதனை

2021-ஆம் ஆண்டு 6 சதங்கள், 2022-ஆம் ஆண்டு 5 சதங்கள், 2023-ஆம் ஆண்டு 2 சதங்கள், 2024-ஆம் ஆண்டு இதுவரை 3 சதங்கள் என 44 மாதங்களில் 16 சதங்கள் அடித்து நொறுக்கி உள்ளார். மேலும் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை தொடவும் அவருக்கு இன்னும் 3600 ரன்கள் மட்டுமே உள்ளதால் அந்த சாதனை உடைக்கவும் ரூட்டுக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அதேவேளையில் விராட் கோலி தனது கரியரின் கடைசி கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement