121க்கு ஆல் அவுட்.. வெ.இ அணியை தெறிக்க விட்ட அறிமுக இங்கிலாந்து வீரர்.. 29 வருடம் கழித்து அபார சாதனை

ENG vs WI Day 1
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூலை 10ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியுடன் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற உள்ளார்.

எனவே அவருக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் சார்பில் ஆரம்பத்திலேயே ஸ்பெஷல் கௌரவம் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் அறிமுக வீரராக களமிறங்கினார்.

- Advertisement -

மிரட்டிய அட்கின்ஷன்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட்டை 6 ரன்னில் காலி செய்த அட்கின்ஷன் அடுத்து வந்த மெக்கன்சியை 1 ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் மறுபுறம் நிதானமாக விளையாடிய மிக்லே லூயிஸ் 27 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் நடையை கட்டினார்.

அந்த சூழ்நிலையில் அடுத்ததாக நங்கூரத்தை போட முயற்சித்த அலிக் அதனேஷை 24 ரன்களில் அவுட்டாக்கிய அட்கின்சன் அடுத்ததாக வந்த ஜேசன் ஹோல்டர், ஜோஸ்வா டா சில்வா ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதோடு நிற்காத அவர் அதற்கடுத்ததாக வந்த அல்சாரி ஜோசப் 17, சமர் ஜோசப்பை 0 ரன்களில் அவுட்டாக்கி தெறிக்க விட்டார்.

- Advertisement -

இறுதியில் மோட்டி 14* ரன்கள் எடுத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெறும் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி இங்கிலாந்து மிரட்டியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய அந்த அணிக்கு அதிகபட்சமாக அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 12 ஓவரில் 45 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் வாயிலாக 29 வருடங்கள் கழித்து அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே 7 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதையும் படிங்க: ரோஹித் கிடையாது.. இலங்கை தொடரில் 2 கேப்டன்களை களமிறக்கும் பிசிசிஐ.. வெளியான தகவல்

அத்துடன் ஜான் பெரிஸ் (7/37), டாமினிக் கோர்க் (7/43) ஆகியோருக்கு பின் அறிமுக போட்டியிலேயே சிறந்த பந்து வீச்சை (7/45) பதிவு செய்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையும் அட்கின்சன் படைத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்யும் இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 189/3 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு பென் டுக்கெட் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் ஜாக் கிராவ்லி 76, ஓலி போப் 57 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஜோ ரூட் 15*, ஹரி ப்ரூக் 25* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement