ரோஹித் கிடையாது.. இலங்கை தொடரில் 2 கேப்டன்களை களமிறக்கும் பிசிசிஐ.. வெளியான தகவல்

IND vs SL 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடருடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர்.

இதைத்தொடர்ந்து ஜிம்பாவே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரில் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் உள்ளிட்ட அனைத்து சீனியர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடி வருகிறது. அந்தத் தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் இந்தியா அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

- Advertisement -

புதிய கேப்டன்கள்:
அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. எனவே அந்தத் தொடர்களில் கேப்டனாக செயல்படப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்டார். எனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளதாக தெரிய வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் 2022 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் 2022 – 2023 காலகட்டங்களில் அவர் இந்தியா விளையாடிய பெரும்பாலான டி20 தொடர்களில் கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

அதே போல ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஓய்வெடுக்க உள்ளதால் கேஎல் ராகுல் இந்தியாவின் கேப்டனாக செயல்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி ஏஎன்ஐ இணையத்தில் கூறியது பின்வருமாறு. “ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். எனவே இலங்கைக்கு எதிரான அடுத்த தொடரில் பாண்டியா ஓய்வெடுப்பதற்கு வாய்ப்பில்லை”

இதையும் படிங்க: இப்படில்லாம் இருந்தா ரோஹித் மாதிரி வரமுடியாது.. சுப்மன் கில்லின் சுயநலமான கேப்டன்ஷிப் மீது ரசிகர்கள் அதிருப்தி

“அதே போல ரோஹித் சர்மா இல்லாத சமயத்தில் கேஎல் ராகுல் இந்திய அணியை வழி நடத்துவதை வாரியம் விரும்புகிறது. ஏனெனில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நன்றாக செயல்படுவதாக வாரியம் நம்புகிறது” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரம் இலங்கை தொடரிலிருந்து இந்திய அணியுடன் இணைந்து செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement