- Advertisement -
உலக கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்.! பெண்கள் போலீசில் புகார்.! இலங்கை வீரர் 1 வருடம் சஸ்பெண்ட்.!

சில மாதங்களுக்கு முன்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் மூன்று வீரர்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஒராண்டு தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இலங்கை வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே ’நைட் கிளப்பிற்கு சென்று தாமதமாக அறைக்கு திரும்பியதால் ஒராண்டு தடையை பெற்றார். இந்நிலையில் மற்றுமொரு இலங்கை வீரர் பாலியல் புகார் அடிப்படையில் இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


கடந்த மே மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்த போது, ஓட்டல் அறையில் இருந்து இலங்கை அணியின் ஜெஃப்ரி வாண்டர்சே “நைட் கிளப்” சென்று விட்டு அடுத்தநாள் தாமதமாக வந்ததால் ஒழிங்கீன்மை காரனமாக அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தென்னாப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இலங்கை அணியில் விளையாடி கொண்டிருந்த குணதிலகா அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு இலங்கை வீரர்கள் சஸ்பெண்ட் செய்யபட்ட சம்பவம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -
dhanushka gunathilaka

இலங்கை வீரர் குணதிலகாவின் ஒழுங்கீன்மை காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறிய இலங்கை கிரிக்கெட் வாரியம், அவர் என்ன செய்தார் என்பதை குறிப்பிடவில்லை. இந்நிலையில் நார்வே நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களை பாலியல் புகாரின் அடிப்படையில் தான் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குணதிலகாவுக்கு இங்கிலாந்து நாட்டில் கிளப் போட்டிகளில் விளையாடி கிரிக்கெட் வீரர் ஒருவர் நண்பராக இருந்துள்ளார். சமீபத்தல் அந்த நபர் குணதிலகாவை பார்க்க இலங்கை வந்துள்ளார். அப்போது இலங்கைக்குச் சுற்றுலா வந்த நார்வே நாட் டைச் சேர்ந்த இரண்டு பெண்களை இலங்கை வீரர் குணதிலகா தங்கி இருந்த அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து அந்த இரண்டு பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இலங்கை வீரர் குணதிலகாவின் நண்பரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் குணதிலகாவிற்கு எந்த சம்மந்தமும் இல்லை என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை, ஆனால், வீரர்கள் தங்கும் அறைக்கு மற்றவர்களை அழைத்து வரக்கூடாது என்பது விதி. இந்த விதியை மீறியதால் தான் குணதிலகாவிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துளளது.

- Advertisement -