IPL 2023 : காயமடைந்த கேன் வில்லியம்சனுக்கு பதிலாக சென்னை குறி வைத்த தரமான வீரரை வாங்கிய குஜராத் – விவரம் இதோ

Kane-Williamson
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை களமிறங்கியுள்ள 10 அணிகளில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் சென்னை (2010, 2011) மற்றும் மும்பை (2019, 2020) ஆகிய ஆண்டுகளுக்கு பின் கோப்பையை தக்க வைக்கும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ளது. அந்த பயணத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையை தன்னுடைய முதல் போட்டியில் போராடி தோற்கடித்த அந்த அணி இந்த சீசனையும் வெற்றியுடன் துவக்கியுள்ளது. ஆனால் அந்த போட்டியில் குஜராத்துக்காக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் சென்னை வீரர் ருதுராஜ் கைக்வாட் அதிரடியாக பறக்க விட்ட சிக்சரை பவுண்டரி எல்லையிலிருந்து தாவி பிடித்து தடுத்து நிறுத்தும் போது முழங்காலில் காயமடைந்தார்.

அதனால் மிகவும் வலியால் துடித்த அவர் மேற்கொண்டு விளையாடாமல் பாதியிலேயே வெளியேறினார். அந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அதிகப்படியான காயத்தை சந்தித்த கேன் வில்லியம்சன் ஒரு போட்டியில் கூட பேட்டிங் செய்யாமலேயே இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். ஏற்கனவே எல்போ காயத்தால் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு விமர்சனங்களை சந்தித்த அவர் சமீபத்தில் தான் சதமடித்து ஃபார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

மாற்று வீரர்:
அந்த நிலையில் ஒரு போட்டியில் கூட முழுமையாக விளையாடுவதற்கு மீண்டும் காயமடைந்து அவர் வெளியேறியுள்ளது இந்திய ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்நிலையில் காயமடைந்த கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இலங்கை நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் தசுன் சனாக்காவை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. சமீப காலங்களாகவே ஆல் ரவுண்டராக அசத்தலாக செயல்பட்டு 2022 ஆசிய கோப்பை உட்பட இலங்கைக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமையைக் கொண்டுள்ளார்.

குறிப்பாக கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் இந்திய ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். ஆனாலும் டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் அவரை யாருமே வாங்காதது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதன் காரணமாக ஏலத்துக்கு முன்பாக அந்த டி20 தொடர் நடைபெற்று இருந்தால் நிச்சயமாக சனாகாவை வாங்குவதற்கான பணம் தாம் ஆலோசகராக இருக்கும் லக்னோ உட்பட அனைத்து ஐபிஎல் அணிகளிடமும் இருந்திருக்காது என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வெளிப்படையாக பாராட்டினார்.

- Advertisement -

அந்த நிலையில் இந்த ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாகவே நிறைய அணிகளில் முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறிய போது அவர் ஏதாவது ஒரு அணிக்கு வாங்கப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். குறிப்பாக காயமடைந்து வெளியேறிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கெய்ல் ஜமிசனுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கும் என்று சில செய்திகள் வெளியானது அந்த அணி ரசிகர்களிடையே நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

ஆனாலும் அதை செய்யாமல் தென்னாபிரிக்க வீரர் சிசான்டா மஹாலாவை வாங்கியது நிறைய சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல் பும்ரா, ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் இடத்திலும் மும்பை, டெல்லி போன்ற அணிகள் அவரை வாங்க தவறின. அந்த நிலைமையில் தரமான அவரை 50 லட்சம் என்ற குறைந்த விலைக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியுள்ளது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் வில்லியம்சன் கூட பேட்டிங் மட்டுமே செய்வார் என்ற நிலைமையில் சனாகா முக்கிய நேரங்களில் பந்து வீசுவதுடன் சரவெடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி மிடில் ஆர்டரில் பெரிய ரன்களை குவித்து பினிஷிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுக்கும் திறமையைக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : ஷ்ரேயாஸ் ஐயரை தொடர்ந்து கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய மற்றொரு நட்சத்திர வீரர் – அதிகாரபூர்வ தகவல்

அப்படிப்பட்ட அவர் வந்துள்ளதால் குஜராத் அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பந்து வீச்சு துறை மேலும் சமநிலையுடன் பலமடைந்துள்ளது என்றே சொல்லலாம். அதனால் இந்த வருடமும் 2வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை குஜராத் தக்க வைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

Advertisement