இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் சாம்பியனாக குஜராத் டைட்டன்ஸ் அணி மாறி இருக்கிறது. இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணி அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அனைவரது மத்தியிலும் பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக ரசித் கானும் அவர்களுக்கு சப்போர்ட்டாக பல்வேறு வீரர்களும் வெற்றிக்கு உதவியதால் அந்த அணி முற்றிலுமாக தற்போது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படி குஜராத் அணி சிறப்பான வீரர்களை கொண்டு மிகவும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரை கைப்பற்றி இருந்தாலும் இந்த சாம்பியன் அணியை கட்டமைக்க வெளியிலிருந்து வடிவமைத்த முக்கியஸ்தர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அந்த வகையில் அறிமுக தொடரிலேயே கோப்பையை வெல்லும் அளவிற்கு அணியை தயார் செய்த முக்கிய நிர்வாகிகள் பற்றி நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அந்தவகையில் மெகா ஏலம் பெங்களூரில் நடைபெறும் போது ஏற்கனவே குஜராத் அணி மெகா ஏலத்திற்கு முன்னதாக பாண்டியா, ரஷித் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை மட்டுமே தேர்வு செய்திருந்தது.
அந்த மூவரைத் தவிர்த்து எப்படிப்பட்ட வீரர்களை குஜராத் அணி எடுக்கப்போகிறது எப்படி அணியை கட்டமைக்கப் போகிறது என்பது குறித்து யாருக்குமே அப்போது எதுவும் தெரியாது. ஆனால் இன்று சாம்பியன் அணியாக மாறி நிற்கும் குஜராத் அணியை ஏலத்தில் தேர்வு செய்ய தலைமை பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா, ஆலோசகர் கேரி கிறிஸ்டன் மற்றும் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி ஆகிய மூவரும் தான் ஏலத்தில் அமர்ந்திருந்தனர். மற்ற அணிகள் எல்லாம் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் செயல்பட்ட அனுபவத்தினால், முன்னேற்பாட்டினாலும் ஏகப்பட்ட யுக்திகளை கையில் வைத்திருந்தனர்.

ஆனால் முதன்முறையாக ஐபிஎல் தொடருக்கு அடி எடுத்து வைக்கும் இவர்களிடம் எந்த ஒரு கையேடும் இல்லை. ஆனாலும் சரியான திட்டமிடலுடன் குஜராத் அணியில் வாங்கப்படும் ஒரு வீரர்களையும் அவர்கள் திறம்பட தேர்வு செய்து வாங்கி இருந்தனர். எந்த இடத்திற்கு எந்த வீரர்கள் சரியாக இருப்பார்களோ அந்த வீரர்களை அற்புதமாக தேர்வு செய்தார்கள். அதோடு சில வீரர்களுக்கு பெரிய அளவில் பணம் கொடுக்கப்பட்டு வாங்கிய போது இப்படி ஒருயொரு தேர்வு தேவையா என்று கூட சில கிண்டல் பேச்சுக்கள் இருந்தன.
இருந்தாலும் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் மற்றும் விக்ரம் சோலங்கி ஆகிய மூவரும் தங்களுக்கு தேவையான வீரர்களை விடாமல் வாங்கியிருந்தனர். இப்படி அவர்கள் மூவரும் ஒரே திட்டத்துடன் பயணித்து சரியான வீரர்களை வாங்கி அணியை தேர்வு செய்தனர். இந்த தொடரில் 10 அணிகள் இடம் பெற்றிருந்தாலும் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே தங்கள் அணி எவ்வளவு பலமான அணி என்பதை குஜராத் நிரூபித்தது.
இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான டி20 தொடரின் வாய்ப்பை காயத்தால் இழந்த 3 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ
பின்னர் கடைசி வரை இத்தொடரில் விடாமல் விளையாடிய குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. களத்தில் விளையாடிய 11 வீரர்களும் வெற்றிக்காக தங்களது கடின உழைப்பினை அளித்தார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. ஆனால் இப்படி ஒரு அணியை கட்டமைத்த அணியின் நிர்வாகிகளான இந்த மூன்று பேரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் இவர்கள் குறித்த உங்களது கருத்து என்ன? கமென்ட் செக்சனில் பதிவிடலாம்.



