சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் இடையேயான நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 52-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி :
புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களையும், சாய் சுதர்சன் 55 ரன்களையும் குவித்தனர். பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது :
குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக ரஷீத் கான் 4 விக்கெட்டுகளையும், ஹோல்டர் மூன்று விக்கெடுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஐ.பி.எல் போட்டிகளில் தங்களது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டு அவர்கள் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே பெரிய வெற்றியாக இருந்து வந்தது.
இதையும் படிங்க : இதுதான் எங்களுக்கு கிடைத்த பர்பெக்ட் வெற்றி.. ராஜஸ்தானை வீழ்த்தியதற்கு பிறகு – சுப்மன் கில் பேட்டி
இவ்வேளையில் நேற்றைய போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐ.பி.எல் போட்டிகளில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டும் இன்றி இந்த நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் 11 போட்டியில் விளையாடியுள்ள அவர்கள் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலும் இரண்டாவது இடத்திற்கு பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



