ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 52-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது :
ராஜஸ்தான் அணியை வீழ்த்தியதற்கு பிறகு பேசிய சுப்மன் கில் :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவித்தது. பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக 77 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : இந்த போட்டிக்கு முன்னதாக கூட நாங்கள் இந்த போட்டியில் எப்படி வெற்றிபெற வேண்டும்? என்று பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இவ்வளவு ஒரு அற்புதமான போட்டி எங்களுக்கு அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த போட்டியில் வெற்றி அடைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியை நாங்கள் ஒரு பர்பெக்ட்டான வெற்றியாக பெற்றுள்ளோம்.
இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாகவே ரன்களை குவித்ததாக உணர்கிறோம். அதோடு போட்டியின் இடையே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அடிப்பது எளிதாக இருக்காது என்று நினைத்தோம். அந்த வகையிலேயே எங்களது அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். 230 ரன்கள் என்பது நிச்சயம் வெற்றிக்கு போதுமான ரன்களாகவே நினைத்தோம்.
இதையும் படிங்க : நல்ல இடத்துல போட்டும் அடிச்சிட்டாங்க.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி
அதோடு பவர்பிளே ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் நிச்சயம் ஆட்டம் எங்கள் பக்கம் எளிதாக வரும் என்ற யோசனையும் எங்களிடம் இருந்தது. அந்த வகையிலேயே இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் பெற்றுள்ளோம். இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களும் சரி, பந்துவீச்சாளர்களும் சரி மிகச் சிறப்பாக செயல்படவே இப்படி ஒரு அற்புதமான வெற்றி எங்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



