இப்படி ஒரு தரமான கோச்ச பார்த்ததில்ல ! எளிமையால் அனைவரின் பாராட்டுகளை பெறும் பிரபல இந்திய பயிற்சியாளர்

- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கி வெற்றிகரமான 2-வது வாரத்தைக் நெருங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக வரும் மே 22-ஆம் தேதிவரை நடைபெறும் 70 போட்டிகளில் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இதற்கு முன் ஒருமுறை கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆரம்பத்திலேயே தடுமாறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் தலைமையில் களமிறங்கிய குஜராத் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் அடுத்தடுத்து 3 வெற்றிகளை பெற்று ஹாட்ரிக் வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து அசத்தி வருகிறது. அதுவும் இந்த வருடம் இதுவரை நடந்த போட்டிகளில் தோல்வி அடையாத ஒரே அணியாக ஜொலிக்கும் குஜராத் டைட்டன்ஸ் தங்களை குறைவாக எடை போட்டவர்களின் மூக்கின் மேல் கைவைத்து வியக்கும் பார்க்கும் அளவுக்கு தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளது.

- Advertisement -

முதல் திரில் வெற்றி:
அதிலும் மார்ச் 8-ஆம் தேதியான நேற்று நடந்த 16-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது ரசிகர்களை வியக்க வைத்தது. ஏனெனில் மும்பையில் நேற்று இரவு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 27 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ரஷித் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 190 என்ற பெரிய இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர் சுப்மன் கில் 59 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உட்பட 96 ரன்கள் குவித்து முக்கியமான 19-வது ஓவரில் அவுட்டானார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரின் கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது அதை எதிர்கொண்ட இளம் இந்திய வீரர் ராகுல் திவாடியா சரவெடியாக அடுத்தடுத்து 2 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு தனி ஒருவனாக குஜராத்துக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 15 போட்டிகளும் பெரிய அளவில் திரில் தருணங்களை கொடுக்காமல் சுமாராக நடந்த நிலையில் நேற்றைய போட்டியில் குஜராத் பெற்ற வெறித்தனமான வெற்றியைப் பார்த்த ரசிகர்கள் இதுதான் இந்த வருடத்தின் முதல் பிளாக்பஸ்டர் த்ரில் போட்டி என அந்த அணியை மனதார பாராட்டி வருகின்றனர்.

வேற லெவல் கோச் ஆஷிஷ் நெஹ்ரா:
இதன் காரணமாக இந்த வருட கோப்பையை குஜராத் வென்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் ஒரு சில ரசிகர்கள் பேசுகின்றனர். இப்படி குஜராத் டைட்டன்ஸ் இந்த அளவுக்கு வெற்றி நடைபோடுவதற்கு அந்த அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஷிஸ் நெஹ்ரா ஒரு முக்கிய காரணகர்த்தா என்று கூறலாம். இந்தியாவிற்காக தனது அபார பந்துவீச்சால் பல வெற்றிகளை தேடிக் கொடுத்து ஓய்வு பெற்ற அவர் தற்போது புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள குஜராத் அணியின் முதல் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதிலும் கம்ப்யூட்டர், லேப்-டாப், மொபைல் போன், கேமரா என டெக்னாலஜி வளர்ந்து உயர்ந்து நிற்கும் இந்த நவீன காலத்தில் அதை எதையுமே கையிலெடுத்து பயன்படுத்தாமல் ஒரு பள்ளி குழந்தையை போல வெறும் ரஃப் பேப்பரில் குஜராத் அணியின் வெற்றிக்காக அவர் போடும் திட்டங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொதுவாகவே இந்த நவீன யுகத்தில் மொபைல் போன் பயன்படுத்தாமல் யாருமே இல்லாத நிலையில் ஆசிஷ் நெக்ரா மட்டும் தனது சொந்த வாழ்வில் இன்னும் மொபைல் போன் வைத்துக் கொள்ளாமல் 80, 90களில் எப்படி வாழ்ந்தாரோ அதேபோல் இப்போதும் எளிமையாக இருந்து வருகிறார்.

அதே பாணியை ஒரு பயிற்சியாளராகவும் கடைபிடிக்கும் அவர் லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தாமல் இயற்கையாக எப்படி பயிற்சி அளிக்க முடியுமோ அதையே கையாண்டு வருகிறார். அத்துடன் அணி வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதற்காக அலட்டிக் கொள்ளாத அவர் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அணி வீரர்களை சந்தித்து “மீட்டிங் போட்டு பேசுவதற்கு எதுவுமில்லை. நன்றாக சாப்பிடுங்கள் நன்றாக உறங்குங்கள்” என வீரர்களுக்கு மிகவும் பிடித்த பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான் பயிற்சியாளர்கள் மீட்டிங் போட்டு மணிக்கணக்கில் வீரர்களை வறுத்தெடுக்கும் நிலையில் அவர்களுக்கு முழு சுதந்திரத்தை அளித்து அவர்களிடம் வேலை வாங்கும் ஒரு பயிற்சியாளராக ஆசிஸ் நெஹரா இருப்பது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும். அத்துடன் போட்டிகளின் போதும் சாதாரண உடைகளுடன் வலம் வரும் இவர் போட்டி முடிந்த பின் அறையில் எங்கு இடம் கிடைத்தாலும் வசதிகளை தேடாமல் இருக்கும் இடத்தில் உறங்கி எளிமையான மனிதராக காட்சியளிக்கிறார்.

இதையும் படிங்க : கேப்டனா வேற இருக்கீங்க, அப்படி ஆடினால் உங்களுக்கு செட்டாகாது – இளம் வீரருக்கு சேவாக் வைத்த கோரிக்கை

இப்படி எளிமையாகவும் வித்தியாசமாகவும் அதேசமயம் தரமாகவும் செயல்படும் ஆசிஷ் நெக்ராவை போன்ற பயிற்சியாளரை தங்களின் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று பல ரசிகர்களும் அமித் மிஸ்ரா போன்ற ஒரு சில முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement